11 மணியளவில் தொடங்கிய பட்ஜெட் தாக்களில் பல்வேறு திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்தார். பட்ஜெட் 2025 அறிவிக்கப்பட்ட சிறப்பம்சங்கள்:
1.புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.
2.தோல் மற்றும் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு உற்பத்தி அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
3.மாநிலங்களுக்கு வட்டியில்லா கடனாக ரூ.1.5 லட்சம் வழங்க இலக்கு.
4.மருத்துவ படிப்புக்கு கூடுதலாக 10,000 இடங்கள் உருவாக்கப்படும்.
5.ஆன்லைன் உணவு டெலிவரி போன்ற பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மின்னணு அடையாள அட்டை வழங்கப்படும்.
6.நகர்ப்புறங்களில் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
7.இல்லங்களுக்கு குடிநீர் ஜல்ஜிவன் திட்டம் 2028ஆம் ஆண்டு வரை நீட்டிப்பு. நாட்டில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும்.
8.தாமரை விதைகளுக்கான வாரியம் பிகாரில் அமைக்கப்படும்.
9.அசாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும். ஆண்டுக்கு 12.70 லட்சம் டன் உர உற்பத்திக்கு இலக்கு நிர்ணயம்.
10.2047ஆம் ஆண்டுக்குள் 100 கிகா வாட் அணு மின் உற்பத்தி செய்ய திட்டம். சிறிய, நடுத்தர அணு உலைகளை உருவாக்க ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
11.நகரங்களை வளர்ச்சி மையங்களாக உருவாக்க ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கீடு.
12.காப்பீடு துறையில் அந்நிய முதலீட்டு வரம்பு 74%இல் இருந்து 100% ஆக அதிகரிப்பு.
13.நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் நிதி பற்றாக்குறை 4.8%ஆக உள்ளது. மூலதன செலவுக்கு ரூ.10.84லட்சம் கோடி,வரும் நிதியாண்டில் ரூ.14.82 லட்சம் கோடி கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
14.1 கோடி கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து வழங்க சிறப்புத் திட்டம்.
15.மானியத்துடன் கூடிய முத்ரா கடன் திட்டம் மருத்துவத்துறைக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.
16.மூத்த குடிமக்களுக்கான வருமான வரி பிடித்த வரம்பு ரூ.50,000-இல் இருந்து ரூ. 1 லட்சமாக உயர்வு.
17.வீட்டு வாடகைக்கான வரிக்கழிவு ரூ.2.40 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்வு.
18.பழங்குடியினர், பட்டியலினத்தவருக்கு ரூ.2 கோடி கடன் உதவி.
19.வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்வு.
20.எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி உதிரி பாகங்களுக்கு இறக்குமதி வரி விலக்கு.
21.36 உயிர் காக்கும் புற்றுநோய் மருந்துகள் மீதான சுங்க வரி முற்றிலுமாக ரத்து.
22.தேசிய உணவு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவனம் அமைக்கப்படும்.
23.பீகார் மாநில விவசாயிகள், கூட்டுறவு அமைப்புகள் வளர்ச்சிக்காக புதிய திட்டம் அறிவிப்பு.