IE Code ஆனது இறக்குமதியாளர் ஏற்றுமதியாளர் குறியீடு என்றும் அழைக்கப்படுகிறது. இந்திய பிராந்தியத்தில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியைக் கையாளும் வணிகத்தைத் தொடங்க நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் இந்த குறியீட்டைப் பெறுவது கட்டாயமாகும். இந்த குறியீடு இல்லாமல் ஏற்றுமதி அல்லது இறக்குமதி வணிகத்தை பண்ண முடியாது.
Import and Export code எந்தெந்த சுழ்நிலையில் தேவையானது என்றால் ;
இறக்குமதியாளர் வெளிநாட்டிலிருந்து consignment வாங்கும்போது customs-இல் clearance வாங்குவதற்கும்,
ஏற்றுமதியாளர் இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும்பொழுதும்,
வியாபார நோக்கத்திற்காக வெளிநாட்டிலிருந்து கிடைக்கக்கூடிய சேவை, வெளிநாட்டிலிருந்து வாங்கும் பொருட்களுக்கோ, அல்லது இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு அனுப்பக்கூடிய consignment-கும் IE Code தேவை.