திரு: டேய்.! நீ சொல்லித்தானே என் பொண்ணுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தில invest பண்ணேன். அந்த திட்டத்தில புதுசா ஏதோ rule வந்துருக்கமே இதுனால ஏதும் பிரச்னை வருமாடா.?
மருது: முதல பயப்படாத.! Rule பற்றி சொல்றேன் அதுக்கு அப்புறம் நீ பயப்படணுமா, வேணாமான்னு முடிவு பண்ணிக்கோ..!
திரு: சரி.! சொல்றா.?
மருது: முதல் Rule, ஒரு குழந்தையோட அப்பா, அம்மா உயிரோட இருந்து, அந்த குழந்தையோட தாத்தா, பாட்டி Joint account-ல இந்த திட்டத்தை open பண்ணிருந்தா அது செல்லாது. அந்த Account-யை அந்த குழந்தையோட அப்பா, அம்மா பெயர்ல மாத்திறனும். suppose அந்த குழந்தையோட அப்பா, அம்மா இல்லாத பட்சத்தில் அவங்க தாத்தா, பாட்டியே Guardian-அ அந்த account-யை maintain பண்ணலாம்.
திரு: சரி, அடுத்து..!
மருது: இரண்டாவது Rule, ஒரு குழந்தைக்கு இரண்டு account இருக்கக்கூடாது. அப்படி இருந்தா இரண்டாவது account-யை close பண்ணிரனும், close பண்ணுவதற்கு முன்னாடி அதுல இருக்குற Amount-யை முதல் account-க்கு மாத்திரனும்.
திரு: ok.! next…!
மருது: மூன்றாவது Rule, ஒரு குடும்பத்தில் அதிகபட்சமா 2 குழந்தைகளுக்குத்தான் இந்த திட்டத்தில account open பண்ணமுடியும். மூன்றாவதா ஒரு குழந்தை பிறந்தா இந்த திட்டத்தில account open பண்ண கூடாது. அப்படி open பண்ணிட்டிங்கனா அந்த account freeze ஆயிரும்.
திரு: அப்பாடா எனக்கு ஒரு குழந்தை தாண்டா இருக்கு. அப்படியா இப்போதான்பா புரியுது.
