இந்த பதிவுல வருமான வரிச் சட்டம் 2025-ல் வந்திருக்க “Draft Income-tax Rules, 2026” படி, இனிமேல் சொந்தக்காரங்களுக்கு (அப்பா, அம்மா, மனைவி/கணவன்) வாடகை கொடுத்து HRA tax benefit வாங்குறதுல சில அதிரடி மாற்றங்கள் வந்திருக்கு!
அது என்ன புது Rule?
இதுவரைக்கும் வருஷத்துக்கு 1 லட்சத்துக்கு மேல வாடகை கொடுத்தா ஓனரோட PAN கார்டு கொடுத்தா போதும். ஆனா இனிமே, HRA படிவத்துல (Form 12BA/124) ஓனருக்கும் உங்களுக்கும் என்ன உறவுங்கிறத கட்டாயம் மென்ஷன் பண்ணனும்!
அப்போ சொந்தக்காரங்களுக்கு வாடகை கொடுக்கக் கூடாதா?
தாராளமா கொடுக்கலாம், அது 100% லீகல் தான். ஆனா சும்மா Tax மிச்சம் பண்ண Fake ரசீது கொடுத்தா, இனிமே சிஸ்டம் ஈஸியா கண்டுபிடிச்சுடும்.
பயமில்லாம Safe-ஆ HRA claim பண்ண, இந்த 4 விஷயங்களை follow பண்ணுங்க:
வாடகை Agreement: ஓனருக்கும், உங்களுக்கும் கண்டிப்பா முறையான Written Agreement இருக்கணும். Bank Transfer மட்டும், வாடகையை Cash-ஆ கொடுக்காம, UPI / NEFT / Cheque மூலமா மட்டும் அனுப்புங்க. அப்போ தான் Bank Proof இருக்கும்.
ITR Filing: வாடகை வாங்குற உங்க உறவினர், அந்த பணத்தை அவங்க ITR-ல ‘Rental Income’-ஆ காட்டி கண்டிப்பா Tax File பண்ணிருக்கணும்.
Old Tax Regime: இந்த HRA சலுகை எல்லாமே Old Tax Regime மட்டும் தான் பொருந்தும். Tax Filing பண்றப்போ சரியான Documents இல்லாம HRA claim பண்ணி Income Tax-ல நோட்டீஸ் வாங்காதீங்க. உஷாரா இருங்க! உங்களோட நண்பர்கள் & family குரூப்களுக்கு இந்த பதிவை ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க.
