F & O-ல trade loss பண்ண ஒரு நபருக்கு அவர் அந்த loss-அ வருமான வரியில் காண்பிக்காததுனால கிட்டத்தட்ட ரூபாய் 69 கோடிக்கு வருமான வரி தாக்கல் செய்யணும்னு நோட்டீஸ் வந்துருக்கு. இந்த விசயத்துல என்ன நடந்துருக்கு.? அவர் என்ன தவறு செஞ்சுருக்காருனு பாக்கலாம்.?
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரு விவசாயி கடந்த 2014-ஆம் ஆண்டு F & O-ல trade பண்ணிருக்காரு, அவரு இதுல 26 லட்சம் வரைக்கும் loss பண்ணிருக்காரு. ஆனா, அந்த வருஷம் வருமான வரி தாக்கல், இந்தF & O trade and loss பத்தி அவரு அத வருமான வரியில குறிப்பிடமா தாக்கல் செய்துவிட்டார்.
பொதுவா share market-ல loss ஆனாலும் அதையும் வருமான வரியில குறிப்பிட்டு தாக்கல் செய்யணும். அவரு அந்த loss-அ குறிப்பிடாததுனால, 2021 ஆண்டு இவருடைய account-ல இருந்து இந்த transaction நடந்துருக்கு ஆனா வருமான வரி செலுத்தலைன்னு வருமான வரி துறை இந்த case எடுத்து விசாரிக்க ஆரம்பிக்கிறாங்க.
இதை தொடர்ந்து 2022-ல உங்களுடைய pan card நம்பரை பயன்படுத்தி அதிகமான value-ல transaction பண்ணியிருக்கீங்க, ஆனா அத பத்தி அதாவது யாருக்கு எவ்வளவு கொடுத்தீங்க, அதன் மூலமா உங்களுக்கு எவ்வளவு profit கிடைச்சது அப்டிங்கிறதா உங்களுடைய வருமான வரியில எதையுமே குறிப்பிடவில்லை. அதனால, அதற்கான விளக்கத்தை கொடுக்கணும்ன்னு E-Mail மூலமா அவருக்கு நோட்டீஸ் வந்துருக்கு, ஆனா, அவர் அந்த E-Mail பார்க்கவில்லை, அந்த நோட்டீஸையும் படிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
வருமான வரி துறைக்கு நோட்டிஸ்க்கான எந்த வித பதிலும் வரவில்லைனு, அவருடைய account-ல இருந்து 69 கோடிக்கு transaction நடந்திருக்கு அப்டினு குறிப்பிட்டுருக்காங்க. இத எந்த அடிப்படையில சொல்ராங்க அப்டினா sales மற்றும் purchase அடிப்படையில சொல்ராங்க, அத income-அ consider பண்ணிருக்காங்க. பொதுவாவே இந்த மாதிரியான amount sales மற்றும் purchase-அ எப்படி assume பண்ணாங்கன்னு, பலரும் இத கேள்வி எழுப்பிட்டுயிருக்காங்க. but வருமான வரி துறை அவருடைய transaction-அ இப்படித்தான் வரையறுத்துருக்காங்க.
மே 2023-ல மறுபடியும் ஒரு நோட்டீஸ் அனுப்பியிருக்காங்க. அதுல உங்களுடைய income-அ நாங்க 68 கோடி ரூபாய் வரைக்கும் கிடைச்சிருக்கு அப்டிங்கிறத கண்டுபுடுச்சுருக்கோம். அதுமட்டுமில்லாமல், 2014-லிருந்து நீங்க அதுக்கு கட்டவேண்டிய வரி, உங்களுக்கு வந்த income மற்றும் அதுக்கான interest amount-வும் சேர்த்து 69 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தணும்னு வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தாங்க. அவர் இந்த mail-யையும் பார்க்கவேயில்லை.
இதற்கும் எந்த பதிலும் வராததுனால, கடந்த டிசம்பர் 2024-ல வருமான வரி துறை இவருடைய bank account-அ freeze பன்னிருறாங்க. bank account freeze ஆனதுக்கு அப்புறம்தான் அவரு என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க try பன்றாரு. bank-ல கேக்கும்போது அவங்க சொன்னதுக்கு அப்புறம்தான் இவருக்கு இதெல்லாம் தெரியவருது.
வருமான வரி துறை தான் account-அ freeze பண்ணிருக்காங்க அப்படிங்கிறது தெரியவருது. இத பத்தி வருமான வரி துறையிடம் விளக்கம் கேக்கும்போது அவங்க நடந்தத எல்லாத்தையும் சொல்ராங்க. அவரும் எனக்கு loss தான் ஆச்சு எனக்கு இலாபம் ஏதும் இல்லைனு அப்டினு சொல்லுறாரு.
இப்போ இவர கட்ட சொன்ன 69 கோடி ரூபாயையும் கட்டமுடியாது அப்டினு சொல்லிட்டு அத அப்பில் பண்றதுக்காக try பன்றாரு, ஆனா இந்த மாதிரி அப்பில் பண்ணி, demand amount எவ்வளவோ அதுக்கு stay வாங்கணும். அப்படி அந்த stay வாங்கணும்னு அதுக்கு அந்த amount-ல இருந்து 20% deposit பண்ணனும். ஆனா deposit பண்றதுக்கு அந்த amount கூட இல்லைங்கிறாரு. இவரலா tax amount கட்டமுடியாது, stay வாங்குறதுக்கு 20% amount-யையும் deposit பணமுடியாதுங்கிற சூழ்நிலையில வருமான வரி துறை அவருடைய மற்ற சொத்துக்களை கையகப்படுத்த வாய்ப்பு இருக்கா அப்படிங்கிறதா இந்த case முடுஞ்சு தீர்ப்பு வந்தாதான் தெரியும்.
இதுல இருந்து என்ன தெரிய வருதுன்னா share market-ல invest பண்ணி இலாபம் வருதோ, நஷ்டம் வருதோ, உங்களுக்கு வர income-க்கு வருமான வரி தாக்கல் கட்டாயம் செய்யவேண்டும். அப்படி வருமான வரி தாக்கல் செய்யல அப்டினா இப்படிதான் பல வருடம் கழித்து கூட ஒரு பெரிய amount கட்ட சொல்லி நோட்டீஸ் வரும். so, வருகின்ற வருமான வரி தாக்களில் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்துவிடுங்கள்.