நீங்க ஒரு நிறுவனத்தில் வேலை செஞ்சுகிட்டு இருந்திங்கனா, உங்களுக்கு இப்படி ஒரு மின்னஞ்சல் வந்திருக்கும். நடப்பு நிதியாண்டிற்கான investment details-அ submit பண்ணசொல்லிருப்பாங்க. உங்கள் வருமானத்திலிருந்து வரி பிடிக்கல் இருக்க investment பண்ணிதான் ஆகணும். ஆனா, நீங்க இன்னும் investment பண்ண ஆரம்பிக்கவேயில்லையா, கவலைவேண்டாம் பழைய வரி முறையை தேர்ந்தெடுத்தவங்களுக்கு tax save பண்றதுக்கான 5 வழிகளை பாக்கலாம்.
ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலையும், ஊழியர்கள் தங்களுடைய investment தொடர்பான தகவல்களை நிறுவனத்துக்கு சமர்ப்பிக்கவேண்டும். நிதியாண்டின் இறுதியில் investment பண்ணத்துக்கான ஆதாரங்களை சமிர்ப்பிக்கணும். அதன் அடிப்படையில, நிறுவனமானது எவ்வளவு tax பிடிக்கணும்னு கணக்கிடுறாங்க, அதற்கேற்றாற்போல் வருமானத்திலிருந்து tax பிடுச்சு அந்த பணத்தை government-க்கு கட்டிருவாங்க.
இது உங்களுடைய Form 16-ல reflect ஆகுது. உங்களுடைய investment-க்கான ஆதாரங்களை சரியான நேரத்தில சமர்பிக்கல அப்டினா வரியா நிறைய பணத்தை கட்டவேண்டியிருக்கும். சரி இப்போ tax save பண்றதுக்கான வழியை பாக்கலாம்.
1. 80C:
இதன் மூலம் எப்படி வரி சலுகை பெறலாம் அப்டிங்கிறதா பாக்கலாம். PPF, EPF, ஆயுள் காப்பீடு(LIC), 5 ஆண்டுக்கான நிரந்தர வைப்பு தொகை(Fixed Deposit) இது போன்ற investment-கள் இதுக்கு கீழதான் வருது. இதன் மூலம் maximum ரூபாய் 150000 வரை வரி விலக்கு பெறமுடியும்.
2. 80E:
உங்களுக்காகவோ, உங்கள் மனைவிக்காகவோ அல்லது உங்கள் குழந்தைகளுக்காகவோ உயர் கல்வி படிக்கிறதுக்காக நீங்க Loan எடுத்திருந்தீங்க அப்டினா அதுக்கு செலுத்துற வட்டிக்கு இதன் வரி விலக்கு பெற முடியும். இந்த section-ல இருக்கிற மிக பெரிய benefits என்னன்னா நீங்க எவ்வளவு தொகை வட்டியா செலுத்துறீங்களோ அந்த மொத்த தொகையையும் வரி விலக்கா வாங்கிக்கலாம். education loan எடுத்ததுக்கு அப்புறம் 8 வருசத்துக்கு (or) வட்டியை திரும்ப கட்டுறவரைக்கும் வரி விலக்கு வாங்கிக்கலாம்.
3. 80D:
Health insurance பிரீமியம் கட்டினீங்கனா அதுக்கும் நீங்க வரி விலக்கு பெற முடியும். இதன் மூலம் 25000 வரையிலும், உங்களுடைய பெற்றோர் 60 வயதுக்கு மேல் இருந்தால் 50000 வரையிலும் வரி சலுகை பெறலாம். Health insurance உங்களை மட்டும் அல்ல உங்களுடைய நிதியையும் பாதுகாப்பா வச்சுருக்கும். உங்களுக்கும், உங்க குடும்பத்துக்கும், உங்க பெற்றோருக்கும் health insurance எடுத்துக்கலாம் இந்த section மூலம் வரி சலுகையையும் வாங்கிக்கலாம்.
4. Section 24b:
இதன் மூலம் housing loan எடுத்திருந்தால் அதற்கான அசல் மற்றும் வட்டி தொகையை வருமான வரித்துறையிடம் இருந்து வரி சலுகை வாங்கிக்கலாம். அசல் தொகையிலிருந்து 150000 வரை 80C-யில் வரி விலக்கும் மற்றும் வட்டி பணத்திலிருந்து section 24b-யில் 200000 வரையிலும் வரி விலக்கும் பெறலாம்.
5. சேமிப்பு வங்கி கணக்கு வட்டி வரி விலக்கு:
உங்களுடைய சேமிப்பு வங்கி கணக்கில் வரும் வட்டிக்கு வரி சலுகை உண்டு. உங்கள் வயது 60 கீழ் இருந்தால் Section 80 TTA மூலம் 10000 வரையிலும், உங்களது வயது 60 மேல் இருந்தால் Section 80 TTB மூலம் 50000 வரையிலும் வரி விலக்கு பெறலாம்.