சரி வாங்க. நம்ம பொழப்பை பார்ப்போம்.
ஒரு வழியாக வருமான வரித்துறை சென்ற நிதியாண்டிற்கான IT Forms களை ரிலீஸ் பண்ண ஆரம்பித்து விட்டனர். ஆனால் இன்னமும் முழுமையாக வரவில்லை. இப்போதைக்கு மாத சம்பளம் வாங்குபவர்களும், தொழிலை செய்து வருமானம் பெறுபவர்களும் மட்டும் தாக்கல் செய்து கொள்ளும் அளவிற்கு வந்துள்ளது. இவைகளும் நேரடியாக தளத்திற்கு சென்று தாக்கல் செய்யும் அளவிற்கு வராமல் Excel sheet மட்டும் வெளியிட்டுள்ளனர். இதில் கொடுக்கப்பட்ட பாரத்தில் வருமான வரி தகவல்களை கொடுத்து தாக்கல் செய்து பின்னர் அதனை JSON File ஆக மாற்றி வருமான வரி தளத்தில் Upload செய்து தாக்கல் செய்யும்படி வைத்துள்ளார்கள். சுற்றி வளைத்து மூக்கைத் தொடுவது போல உள்ளது இந்த நடைமுறை.
இருந்தாலும் @intaxseva வில் எங்களது வாடிக்கையாளர்களுக்கு தாக்கல் செய்ய ஆரம்பித்து விட்டோம். தாக்கல் செய்ய செய்ய விரைவில் அவர்களுக்கு Refund வந்துவிடும். கோடை விடுமுறைக்கும், பள்ளி, கல்லூரி திறந்தவுடன் ஆகும் செலவுகளுக்கும் மக்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.
தனியார் நிறுவனங்கள் பலவற்றில் இன்னும் Form16 கொடுக்கப்படவில்லை. இதில் ஆச்சரியமாக டாடா நிறுவனத்தின் TCS மட்டும் தனது ஊழியர்களுக்கு Form16 கொடுத்துவிட்டார்கள். அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் எங்களது வாடிக்கையாளர்கள் வருமான வரி தாக்கல் செய்து வருகிறார்கள். உண்மையில் TATA நிறுவனங்களின் மீதான நம்பிக்கை கூடுகின்றது.
நிதியாண்டின் கடைசி காலாண்டு (ஜனவரி பிப்ரவரி மார்ச்) வசூலிக்கப்பட்ட ஊழியர்களின் வரியானது அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் கட்டி விட வேண்டும். பெரும்பாலான நிறுவனங்கள் இதனை காலாண்டின் கடைசி மாதமான ஜூன் மாதத்தில் கட்டுவார்கள். ஜூலை மாதம் 31ஆம் தேதி உடன் ஊழியர்களுக்கான வருமான வரி தாக்கல் முடிகிறது. அதற்கு அடுத்து ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
ஆக ஊழியர்களுக்கு ஜூலை மாதம் மட்டும்தான் வருமான தாக்கல் செய்ய அவகாசம் கிடைக்கிறது. இது உண்மையில் தேவையில்லாத நெருக்கடி. ஊழியர்களிடம் பிடித்த வருமான வரியை ஏப்ரல் மாதத்திலேயே கட்டி விட்டால் வருமான வரி தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கிடைக்கும். அதனால்தான் நான் TCS நிறுவனத்தை பாராட்டுகிறேன்.
தமிழ்நாடு அரசு ஊழியர்களின் வருமான வரியை செலுத்தி Form16 இன்னும் கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. கடைசி தினம் வரை இழுக்காமல் விரைவிலேயே அவர்களுக்கு Form16 கொடுத்தால் “திராவிட மாடல்” ஆட்சிக்கு பெருமை சேரும். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை, இத்தனை ஆண்டுகளில் இவ்வாறு நடைபெற்றதே கிடையாது என்று கூறுகிறார்கள் மூத்த அரசு ஊழியர்கள்.
சென்ற ஆண்டு நாங்கள் வருமான வரி தாக்கல் செய்த மாநில அரசு ஊழியர்கள் பெரும்பாலானோர் ஜூலை 31ஆம் தேதிக்குப் பிறகு ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் கட்டியவர்களே. அந்த அளவிற்கு Form16 கிடைக்க தாமதமாகி உள்ளது.
Form16 கிடைத்த தனியார் நிறுவன ஊழியர்கள் காலதாமதம் செய்யாமல் வருமான வரி தாக்கல் செய்து விடுங்கள். அதேபோல தனிநபர் தொழில்முனைவோர்கள், தொழில்வல்லுனர்கள் வருமானவரி செய்து விடுங்கள்.
Intaxseva உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறது. முதல் கமெண்டில் உள்ள கூகுள் பாரத்தை பூர்த்தி செய்தால் அவர்களே உங்களை 8903330035 என்ற எண்ணிலிருந்து அழைத்து வருமான வரி தாக்கல் செய்ய உதவுவார்கள்.
https://forms.gle/3qQ5NcCrw9VV3EuPA