House Property-ல இருந்து வர மொத்த income-க்கு tax கட்டணும்னு நிறைய பேர் நினைச்சுட்டு இருக்காங்க. House property income-னா என்ன.? உங்களுடைய வீட்டை வாடகைக்கு விடுறது மூலமா வர income தான் house property income. அந்த income tax limit-அ தாண்டும்போது நாம tax கட்டுற மாறி இருக்கும்.
உங்களுக்கு house property-ல இருந்து வர மொத்த income-க்கும் tax கட்டவேண்டியதில்லை. இந்த tax குறைப்பதற்கு சில benefits வருமான வரியில இருக்கு:
உதாரணத்துக்கு, உங்களுக்கு சிவகங்கைல ஒரு house property இருக்கு அத வாடகைக்கு விடுறிங்க,
முதல் மாடிக்கு ரூபாய் 18000 p.m. வீதம் 9 மாதம் வாடகை -162000
இரண்டாவது மாடிக்கு ரூபாய் 15500 p.m. வீதம் 12 மாதம் வாடகை -186000
அதே போல, கரைக்குடில ஒரு house property இருக்கு அத வாடகைக்கு விடுறிங்க,
முதல் மாடிக்கு ரூபாய் 9000 p.m. வீதம் 12 மாதம் வாடகை -108000
இரண்டாவது மாடிக்கு ரூபாய் 8500 p.m. வீதம் 10 மாதம் வாடகை -85000
இதுல இருந்து பார்க்கும்போது உங்களுக்கான மொத்த income 541000, இப்போ இந்த மொத்த income எப்படி குறைக்கிறதுனா பாக்கலாம்:
municipal tax வாடைக்கு விட்டுருக்கிற portion-க்கு மட்டும் எவ்வளவோ அத கழிச்சுக்கோங்க, தோரயமா 9000 வச்சுப்போம் அத கழுச்சா 532000, அந்த property-க்கான repairs-க்காக 30% exemption கொடுக்கிறாங்க, அப்போ 30%-க்கு 159600 வரும் அத 532000-லிருந்து கழுச்சா 372400 வரும்.
அடுத்ததா, அந்த property-ல loan இருந்தா அந்த loan-க்கான interest amount less பண்ணிக்கலாம். loan interest amount வருசத்துக்கு 24600 இத less பண்ணா 347800, இதுதான் உங்களுடைய taxable income. பழைய வரி முறையில 5 லட்சத்துக்குள்ளளையும், புதிய வரி முறையில் 7 லட்சத்துக்குள்ளையும் income இருந்தா tax கட்டவேண்டியது இல்லை.