2025-26 மதிப்பீட்டு ஆண்டிற்கான ITR-1 (Sahaj) மற்றும் ITR-4 (Sugam) படிவங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு அரசாங்கம் சில மாற்றங்களைச் செய்துள்ளது, இப்போது பட்டியலிடப்பட்ட பங்குகளிலிருந்து ஒரு (Financial Year) நிதியாண்டில் ரூ.1.25 லட்சம் வரை Long Term Capital Gain (LTCG) உள்ள தனிநபர்களும் ITR-1 ல் தாக்கல் செய்யலாம். முன்னதாக, அத்தகைய நபர்கள் ITR-2 ல் தாக்கல் செய்ய வேண்டியிருந்தது.
ITR-1 ஐ யார் பயன்படுத்தலாம் :
சமீபத்திய CBDT அறிவிப்பில், ITR-1 படிவம் பின்வரும் வரி செலுத்துவோரால் பயன்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது –
a) ரூ.50 லட்சம் வரை மொத்த வருமானம் உள்ள தனிநபர்கள்
b) சம்பளம், ஒரு வீடு சொத்து அல்லது பிற ஆதாரங்களில் இருந்து வருமானம் உள்ள தனிநபர்கள்
c) பிரிவு 112A இன் கீழ் ரூ.1.25 லட்சம் வரை LTCG உள்ள தனிநபர்கள்
d) ரூ.5000 வரை விவசாய வருமானம் உள்ளவர்கள்.
ITR-4 ஐ யார் பயன்படுத்தலாம் :
பின்வரும் வரி செலுத்துவோர் ITR-4 ஐப் பயன்படுத்தி தங்கள் ஆண்டு வருமானத்தை தாக்கல் செய்யலாம் –
a) ரூ.50 லட்சம் வரை மொத்த வருமானம் உள்ள தனிநபர்கள், HUFகள் மற்றும் நிறுவனங்கள்
b) பிரிவுகள் 44AD, 44ADA அல்லது 44AE இன் கீழ் கணக்கிடப்படும் வணிகம் மற்றும் தொழிலில் இருந்து வருமானம் உள்ளவர்கள்
c) பிரிவு 112A இன் கீழ் ரூ.1.25 லட்சம் வரை Long Term Capital Gain (LTCG) கொண்டவர்கள்.