Section 80C மூலம் வருமான வரியை குறைக்க இயலுமா என்றால் கண்டிப்பாக முடியும். Section 80C மூலம் 1,50,000 வரையிலும் வருமான வரி விலக்கு பெறமுடியும்.
Section 80C ஆனது 80CCC, 80CCD (1), 80CCD (1B) and 80CCD (2) ஆகியவற்றை உள்ளடக்கியது.
Section 80CCD (1B) கூடுதலாக 50,000 வரி விலக்கு கோரலாம். அதை தவிர்த்து மற்ற பிரிவுகள் சேர்த்து வரி
விலக்கு கோருவதற்கான ஒட்டுமொத்த வரம்பு 1,50,000 ஆகும்.
வரி விலக்குகளுக்கு தகுதியான முதலீடுகள் :
Section 80C ஆனது
-PPF
-EPF
-Life Insurance premium
-Equity linked saving scheme (ELSS Mutual Fund)
-principal amount payment towards home loan
-stamp duty and registration charges for purchase of property
-Sukanya smriddhi yojana (SSY)
-Senior citizen savings scheme (SCSS)
-ULIP (Unit Linked Insurance Plan)
-tax saving FD for 5 years
-Infrastructure bonds etc
போன்றவற்றிற்கு விலக்கு அளிக்கிறது.
Section 80CCC ஆனது வருடாந்திர ஓய்வூதியத் திட்டங்களுக்கு விலக்கு அளிக்கிறது.
80CCD (1)-இல் NPS-க்கான விலக்கு :
-வருமானத்தில் 10% (வரி செலுத்துபவர் ஊழியராக இருந்தால்)
-20% மொத்த வருமானம் (சுயதொழில் செய்பவர்களாக இருந்தால்)
80CCD (1B)-இல் NPS-க்கான விலக்கு :
-NPS கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கும், Retirement Benefit Fund-கும் ரூ .50,000 கூடுதல் விலக்கு அனுமதிக்கப்படுகிறது.
-அடல் பென்ஷன் யோஜனாவுக்கான (Atal Pension Yojana) பங்களிப்புகளும் விலக்கு பெற தகுதியானவை.
80CCD (2)-இல் NPS-க்கான விலக்கு :
இந்த பிரிவின் கீழ் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் (dearness allowance) 10% வரை கழிக்க முதலாளிகளின் பங்களிப்பு அனுமதிக்கப்படுகிறது. இந்த பிரிவில் சம்பளம் பெறும் நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது, சுயதொழில் புரிபவர்களுக்கு அல்ல.