எனது நண்பர் ஒருவர் வங்கியில் லோன் வாங்குவதற்காக சென்றுள்ளார். வங்கி ஊழியர் அவரிடம் 3 வருடம் வருமான வரி தாக்கல் டாக்குமெண்ட்ஸ்ஸை submit செய்யுமாறு கூறினர். ஆனால் அவர் நடப்பு ஆண்டிற்கு மட்டுமே வருமான வரி தாக்கல் செய்திருந்தார். பழைய 2 வருடத்திற்கு வருமான வரி தாக்கல் செய்யவில்லை அதனால் அவருக்கு லோன் Cancel ஆகிவிட்டது. நண்பர் என்னிடம், இந்த விஷயத்தை கூறினார். பழைய இரண்டு வருடத்திற்கு இப்போதும் தாக்கல் செய்யலாம் என்றேன். அப்படியா, அது எப்படி பழைய வருடத்திற்கு வருமான வரி தாக்கல் செய்யும் காலம் முடிந்துவிட்டதே இப்பொது எப்படி தாக்கல் செய்ய முடியும் என்றார். வருமான வரித்துறை படிவம் “ITR-U (Updated Return)”-யை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், பழைய 2 வருடத்திற்கு வருமான வரி தாக்கல் செய்துகொள்ளலாம். நீங்கள் ஏற்கனவே வருமான வரி தாக்கலில் ஏதேனும் வருமானத்தை காட்டாமல் இருந்திருந்தாலோ, ஏதேனும் தவறுதலாக தாக்கல் செய்திருந்தால் மற்றும் வருமான தாக்கல் செய்வில்லையென்றாலோ இந்த படிவம் மூலம் ஒரேயொரு முறை நாம் தாக்கல் செய்துகொள்ளலாம்.
குறிப்பு:
ஆனால், Updated Return-யில் Refund கிளைம் செய்யமுடியாது. Penalty pay பண்ணிதான் Updated Return செய்ய முடியும்.
இது பற்றி ஏதும் சந்தேகம் இருப்பின் 8903330035 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டால் எங்களது குழுவினர் உங்களுக்கு உதவுவார்கள்.
மேலும் இந்த கூகிள் பாரத்தில் உங்கள் விவரங்களை அளித்தால் எங்களது குழுவினர் உங்களை தொடர்புகொண்டு உதவ தயாராக இருக்கிறார்கள்.