ஒரு இடத்தை 10,00,000 லட்சத்துக்கு வாங்கி 50,00,000 லட்சத்துக்கு வித்தோம்னா முன்னாடிலாம் Indexation benefits கொடுத்திருந்தாங்க, tax 2.45 லட்சம் கட்டவேண்டியிருந்தது. ஆனால், இப்ப அந்த Indexation benefits கிடையாது. இப்போ tax 5 லட்சம் கட்டவேண்டியிருக்கு. அதனால, ரியல் எஸ்டேட்ல invest பண்ணா இலாபமா.?நஷ்டமா.? பாக்கலாம்.
Indexation அப்டினா வருஷாவருசம் government இந்த வருஷம் எவ்வளவு விலைவாசி உயர்ந்திருக்குனு inflation chart கொடுப்பாங்க. இத Indexation chart-னு சொல்லுவாங்க.
Indexation-யோட tax எவ்வளவு வருதுன்னு பாப்போம்:
இப்போ 2001 ஒரு Property-யை 10 லட்சத்துக்கு வாங்கி, அத 2024-ல 50 லட்சத்துக்கு விற்கிறோம் அப்டினா tax 20% கட்டணும். அதுக்கான Indexation (10 லட்சம் * 363 / 100 = 36.3 லட்சம்). 50 லட்சம் – 36.3 லட்சம் = 13,70,000. அப்போ நமக்கான இலாபம் 13,70,000 இதுக்குத்தான் 20% tax கட்டணும், இதுக்கான tax 2,74,000.
Indexation இல்லாம tax எவ்வளவு வருதுன்னு பாப்போம்:
2001 ஒரு Property-யை 10 லட்சத்துக்கு வாங்கி, அத 2024-ல 50 லட்சத்துக்கு விற்கிறோம் அப்டினா tax 12.5% கட்டணும். இப்போ, இலாபம் 40 லட்சம் இதுக்கான tax 5 லட்சம் கட்டவேண்டியிருக்கும்.
இத இரண்டையும் பார்க்கும்போது Indexation இருக்கிறது தான் benefit-னு தோனும். இதே போல இன்னொரு உதாரணம் பாக்கலாம்:
Indexation-யோட tax எவ்வளவு வருதுன்னு பாப்போம்:
2001 ஒரு Property-யை 10 லட்சத்துக்கு வாங்கி, அத 2024-ல 1 கோடிக்கு விற்கிறோம் அப்டினா tax 20% கட்டணும். அதுக்கான Indexation (10 லட்சம் * 363 / 100 = 36.3 லட்சம்). 1 கோடி – 36.3 லட்சம் = 63.7 லட்சம். அப்போ நமக்கான இலாபம் 63.7 லட்சம் இதுக்குத்தான் 20% tax கட்டணும், இதுக்கான tax 12.74 லட்சம்.
Indexation இல்லாம tax எவ்வளவு வருதுன்னு பாப்போம்:
2001 ஒரு Property-யை 10 லட்சத்துக்கு வாங்கி, அத 2024-ல 1 கோடிக்கு விற்கிறோம் அப்டினா tax 12.5% கட்டணும். இப்போ, இலாபம் 90 லட்சம் இதுக்கான tax 11.25 லட்சம் கட்டவேண்டியிருக்கும்.
இத இரண்டையும் பார்க்கும்போது Indexation இல்லாததுதான் benefit-னு தோனுதுல, இப்ப உங்களுக்கு ஒரே குழப்பமா இருக்குல்ல அப்போ என்ன பண்ணலாம், அதாவது லாபம் அதிகமா வச்சு வித்தோம்னா tax கம்மியா கட்டுறமாறியிருக்கும். லாபம் கம்மியா வச்சு வித்தா tax அதிகமா கட்டுறமாறியிருக்கும்.