மீரட் (உத்தரப் பிரதேசம்) நகரில் மிகப் பெரிய ஜிஎஸ்டி மோசடி ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. GST நுண்ணறிவு துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சுமார் ₹2,150 கோடி மதிப்பிலான போலி உள்ளீட்டு வரி வரவு (ITC) மற்றும் ஏற்றுமதி திருப்பிச் செலுத்தல் (EXPORT REFUND) மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போலி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, உண்மையான வணிகம் இல்லாமல் போலி BILLS தயாரிக்கப்பட்டுள்ளன. அந்த போலி பில்களின் மூலம் தவறான GST ரிட்டர்ன் தாக்கல் செய்து, அரசிடமிருந்து திருப்பிச் செலுத்தல் பெற்றுள்ளனர்.
இந்த மோசடியில் தொடர்புடைய பல நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது வரி செலுத்தும் நேர்மையான வணிகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு பெரிய பொருளாதார குற்றமாகும்.
இந்த சம்பவம் GST அமைப்பின் கண்காணிப்பு அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறது.போலி பில் மற்றும் போலி நிறுவனங்களை கண்டறிய GST துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வரி மோசடிகளைத் தடுக்க சட்ட விதிகள் மேலும் கடுமைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேர்மையான வரி செலுத்துவோர் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வரி விதிகளை முறையாக பின்பற்றுவது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதாகும். இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் இதுபோன்ற மோசடிகளுக்கு தடையாக அமையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
