புதுசா பிசினஸ் ஆரம்பிக்கிறவங்களுக்கும், GST apply பண்றவங்களுக்கும் ஒரு முக்கியமான Update. இனிமேல் GST Registration Process-ஐ முழுசா மாத்த கவர்மென்ட் “Agentic AI” framework-ஐ கொண்டு வரப்போறாங்க.
Agentic AI-னா என்ன?
சாதாரண AI நம்ம கேக்குற கேள்விக்கு மட்டும் தான் பதில் சொல்லும். ஆனா இந்த Agentic AI, ஒரு Tax Officer மாதிரி தானாவே யோசிச்சு, Verify பண்ணி, முடிவுகளை எடுக்கும்.
இதுனால என்னென்ன மாறப்போகுது?
- Fake GST-க்கு முற்றுப்புள்ளி:
போலி பில் (Fake Invoicing) போடுறதுக்காகவே ஆரம்பிக்கப்படுற Shell Companies-ஐ இது ஈஸியா கண்டுபிடிச்சுடும். PAN, Aadhaar, Bank details, Rental Agreement எல்லாத்தையும் Few Seconds-ல கவர்மென்ட் Database கூட Cross-check பண்ணிடும். - Instant Approval:
உங்க Documents எல்லாம் பக்காவா, Genuine-ஆ இருந்தா, மேனுவல் Approval-க்காக வெயிட் பண்ண வேண்டாம். AI-யே உடனே Verify பண்ணி GST நம்பரை அப்ரூவ் பண்ணிடும். Documents-ல டவுட் இருந்தா மட்டும்தான் Human Review-க்கு போகும். - Smart Verification & Tracking:
எந்த IP Address-ல இருந்து Apply பண்றாங்க, Geo-tagging மூலமா நிஜமாவே அந்த Location-ல ஆபீஸ் இருக்க வாய்ப்பு இருக்கா-னு AI முன்கூட்டியே Track பண்ணிடும். ஒரே நெட்வொர்க்ல இருந்து நிறைய ஃபேக் கம்பெனி வந்தா ஈஸியா பிடிச்சிருவாங்க.
மொத்தத்துல, Tax System ரொம்பவே Fast & Smart ஆகப்போகுது!
