முதலில் நிறுவன பதிவிற்கு அரசுத்தரப்பில் எவ்வளவு கால அவகாசம் தருகிறார்கள் என்பதனை பார்ப்போம், பொதுவாக ஒரு நிறுவனத்தை பிரைவேட் லிமிட்டட் அல்லது பொதுத்துறை நிறுவனமாக பதிவு செய்வதற்கு முன்பாக நாம் தேர்ந்தெடுத்திருக்கும் நிறுவனத்தின் பெயரிலே வேறு ஏதும் நிறுவனம் பதிந்து இருக்கிறார்களா என்பதனை உறுதி செய்ய வேண்டும்.பின்பு நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் பெயரினை பணம் செலுத்தி முன்பதிவு செய்து அந்தப் பெயரிலேயே 20 நாளுக்குள் அனைத்து டாக்குமெண்டையும் சமர்ப்பித்து ஆகவேண்டும், இல்லையென்றால் முன்பதிவு செய்த பெயர் எக்ஸ்பயரியகிவிடும்.இருவது நாளுக்குள்ளக அனைத்து டாக்குமெண்டையும் சமர்ப்பித்துவிட்டாள் அதனை படிவமாக டவுன்லோட் செய்து நமது டிஜிட்டல் சிக்னேச்சர் மூலம் கையெழுத்திட்டு மீண்டும் அதனை அப்லோட் செய்ய வேண்டும், அப்லோட் செய்துவிட்டால் வேலை முடிந்துவிட்டது என்று ஆகாது பின்புதான் அதிகாரிகள் அதில் இருக்கும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்குமாறு இமெயில் மூலம் விளக்க படிவத்தை அனுப்புவார்கள், மீண்டும் அதனை சரிசெய்து நாம் அப்லோட் செய்ய வேண்டும்.சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதற்கான கால அவகாசம் 15 நாள் தான் அரசு தரப்பிலிருந்து கொடுக்கப்படுகிறது,ஒருவேளை 15 நாட்களுக்கு மேல் ஆகி விட்டால் மீண்டும் முதலிலிருந்து தான் நிறுவன பதிவினை தொடங்க வேண்டும்.நிறுவனமாக பதிவு செய்யும்போது பொதுவாக அரசு தரப்பில் இருந்தும் சில தாமதம் ஏற்படுகிறது, அதுபோக சரியான டாக்குமென்ட் பதிவு செய்யும்போதே கொடுக்காத பட்சத்தில் நாமும் தாமதத்திற்கு காரணமாக ஆகிவிடுகிறோம், தனியார் நிறுவனமாக தங்களின் தொழிலை பதிவு செய்ய விரும்புபவர்கள் முன்கூட்டியே நிறுவன பதிவிற்கான டாக்குமெண்டை சரிவர கையில் வைத்துக்கொண்டு நிறுவன பதிவை தொடங்கினாள் எளிதில் நிறுவன CIN எண்ணை பெற்றுவிடலாம்.பிரைவேட் லிமிடெட்டாக பதிவு செய்வார்கள் 2 டைரக்டர்களின் டாக்குமெண்ட் சரியாக இருக்க வேண்டும்,நிறுவனம் இயங்கும் வாடகை அல்லது லீஸ் பாத்திரத்தில் இருக்கும் முகவரி,மின் கட்டண ரசீதில் உள்ள முகவரியும் ஒன்றாக இருக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் அதுவும் தாமதத்திற்கு காரணமாக அமைகிறது.நிறுவனம் பதிவு தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே தங்களின் டிஜிட்டல் சிக்னேச்சரை நிறுவன பதிவு தளத்தில் சமர்ப்பிப்பது சரியாக இருக்கும், நமது டிஜிட்டல் சிக்னேச்சரை தளத்தில் அப்டேட் செய்வதற்கு ஒரு வாரத்திற்கு மேலாக எடுத்துக்கொள்கிறார்கள். இதன் மூலமும் தாமதம் ஆவதற்கான வாய்ப்பு இருக்கிறது.நிறுவன பதிவு தளமானது பத்திலிருந்து பதினைந்து நிமிடத்திற்கு ஒருமுறை Logout ஆகி விடும் எனவே உங்களின் அனைத்து டாக்குமெண்ட்டையும் தனி ஃபோல்டரில் ஏற்றி வைத்துக்கொண்டு குறிப்பிட்ட அந்த நிமிடத்திற்குள் வேகமாக முடிக்க வேண்டும். (காப்பி பேஸ்ட் செய்வதையும் தவிர்ப்பது நல்லது)INTAXSEVA-வில் நிறுவன பதிவு என்று வருபவர்களின் டாக்குமெண்டை பத்திரமாகவும் பாதுகாத்து வருகிறோம்,அன்றாட ஈமெயிலில் அதிகாரிகளிடமிருந்து விளக்கம் கேட்டு மெயில் வந்திருக்கிறதா என்பதனை பார்த்து அன்றைக்கே அதனை முடித்து விடுகிறோம், எங்கள் கிளைன்ட்டிடமிருந்து ஏதேனும் டாக்குமெண்ட் பெற்றுதான் விளக்கத்திற்கு பதிலளிக்க வேண்டுமென்று இருந்தால், அவர்களையும் விடுவதில்லை பத்து நாளுக்குள்ளாகவே அவர்களை துரத்தி விளக்கம் அளித்து விடுவோம். இதற்கு ஒரே காரணம் முந்தைய நிறுவன பதிவுகளில் எங்களுக்கு ஏற்பட்ட அனுபவம்,இனி யாருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்கே இதனை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டியிருக்கிறது.