சின்னதா நாம பண்ற ஒரு தப்பு, எப்படி லட்சக்கணக்குல Penalty கட்ட வைக்கும் அப்படிங்கறதுக்கு இப்போ நம்ம பாக்க போற கேஸ் ஒரு நல்ல உதாரணம்.
இந்தூர்ல 3 buyers சேர்ந்து 75 லட்சத்துக்கு ஒரு property வாங்கியிருக்காங்க. Property வாங்கும் போது, Income Tax rule-படி buyers தான் seller-க்கு காசு கொடுக்கும் போது TDS பிடிச்சு கட்டணும். இந்த கேஸ்ல, அந்த seller-ஓட PAN card, அவர் கொடுத்த Indian local address இதெல்லாம் பார்த்துட்டு, அவர் ஒரு Resident Indian தான்னு நினைச்சு, நார்மலா பிடிக்க வேண்டிய 1% TDS-ஐ மட்டும் அந்த buyers பிடிச்சு கட்டிட்டாங்க.
ஆனா உண்மையான விஷயம் என்னன்னா, அந்த seller ஒரு NRI (அமெரிக்கால செட்டில் ஆனவர்). Rule-படி பார்த்தா, ஒரு NRI-கிட்ட இருந்து property வாங்கும் போது, buyers வெறும் 1% TDS பிடிக்கக் கூடாது. Section 195-படி, கிட்டத்தட்ட 20.6% TDS பிடிக்கணும். இதை அந்த buyers கவனிக்காம விட்டுட்டாங்க.
Income Tax department இதைக் கண்டுபிடிச்சு நோட்டீஸ் அனுப்புனதும், தப்பை உணர்ந்த அந்த 3 buyers-ம் உடனே பேலன்ஸ் கட்ட வேண்டிய TDS தொகையையும், அதுக்கான Interest-ஐயும் கட்டி செட்டில் பண்ணிட்டாங்க. ஆனா, Assessing Officer அதோட விடல. TDS-ஐ குறைவா பிடிச்சதுக்காக, அந்த மூணு buyers-க்கும் தனித்தனியா தலா ரூ. 5.15 லட்சம் Penalty போட்டுட்டாரு.
இதுக்கு அப்புறம் அந்த buyers ITAT (Income Tax Appellate Tribunal) கோர்ட்டுக்கு Appeal போனாங்க. அங்க அவங்க வாதாடுனது என்னன்னா, “நாங்க வேணும்னே டாக்ஸ் ஏமாத்தல. Sale deed-ல seller-ஓட local address இருந்ததால வந்த genuine-ஆன குழப்பம் தான் இது. நோட்டீஸ் வந்த உடனே நாங்க interest-ஓட பணத்தை கட்டிட்டோம்” அப்படின்னு சொன்னாங்க. இதை ஏத்துக்கிட்ட Tribunal, இது ஒரு bona fide mistake தான்னு சொல்லி, அந்த ரூ. 5.15 லட்சம் Penalty-ஐ கேன்சல் பண்ணிட்டாங்க.
அவங்க Appeal போய் Penalty-ஐ கேன்சல் பண்ணிட்டாங்க அப்படிங்கறதுக்காக, எல்லாருக்கும் இதே மாதிரி ரிசல்ட் கிடைக்கும்னு சொல்ல முடியாது. இதுக்காக அவங்க பட்ட அலைச்சலும் ரொம்ப அதிகம்.
இதுல இருந்து நாம கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்:
NRI Status Check: Property வாங்கும் போது seller-ஓட PAN card, லோக்கல் அட்ரஸ் மட்டும் வச்சு அவங்க Resident தான்னு நாமளே முடிவு பண்ணக் கூடாது. அவங்க NRI-ஆ இல்லையான்னு clear-ஆ கேட்டு ஒரு formal declaration வாங்கிக்கிறது ரொம்ப முக்கியம்.
TDS Rules: Seller ஒருவேளை NRI-ஆக இருந்தா, கண்டிப்பா ஒரு CA அல்லது Auditor-ஐ consult பண்ணி, அவங்க guide பண்ற correct-ஆன rate-ல TDS பிடிங்க.
ஒரு சின்ன Mistake பெரிய அளவுல அலைச்சலையும், லட்சக்கணக்குல பண விரயத்தையும் கொண்டு வந்து விட்டுடும். அதனால property வாங்கும் போது documentation விஷயத்துல ரொம்ப கவனமா இருங்க.
உங்க friends யாராவது புதுசா property வாங்க பிளான் பண்றாங்கன்னா அவங்களுக்கு இந்த தகவலை share பண்ணுங்க.
