இரண்டு தினத்திற்கு முன்பாக எங்களிடம் ஜிஎஸ்டி ரிட்டன் செய்பவரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது.
சொல்லுங்க சார் என்றோம்,
பின்பு அவர் எனது ஜிஎஸ்டி எண்ணை கேன்சல் செய்ய வேண்டும் என்றார், அதற்கு அவரிடம் ஏன் கேன்சல் செய்ய வேண்டுமென்று காரணத்தை கேட்டோம், அதற்கு அவர் கூறிய பதில்: தற்போது எனக்கு பிசினஸ் சரிவர போகவில்லை ஜிஎஸ்டி- கான தேவை தற்போது இல்லை ஆனால் எங்கு சென்றாலும் ஜிஎஸ்டி எண் தேவைப்படுகிறது,அதற்காகத்தான் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன் தற்போதும் ஜிஎஸ்டி எண்ணை கேன்சல் செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறேன் என்று சொன்னார்.
அவரின் பேச்சில் எங்களுக்குப் புரிந்தது அவருக்கு ஜிஎஸ்டி எண் தேவை, அதே சமயத்தில் பிசினஸ் தற்போது இல்லை என்று மாதந்தோறும் நில் ரிட்டர்ன் செய்வதால் ப்ராப்ளம் ஏற்படுமோ என்ற அச்சம் அவருக்குள் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதனை அறிந்தோம்.
பின்பு எங்கள் தரப்பிலிருந்து அவருக்கு போதுமான அளவு விளக்கத்தை கொடுத்திருக்கிறோம், அதே சமயத்தில் இந்த குழப்பம் பெரும்பாலானோருக்கு இருப்பதால் அதை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம், பொதுவாக ஜிஎஸ்டி எண் மாநிலங்களுக்குள் தொழில் செய்பவர்களுக்கும், 40 லட்சத்திற்கு கீழ் Turnover செய்பவர்களுக்கும் கட்டாயமில்லை, இருப்பினும் பலரும் ஜிஎஸ்டி எண் எடுப்பதற்கான காரணம் பேங்கில் கரண்ட் அக்கவுண்ட் ஓபன் செய்வதற்கும், தங்களின் தொழிலை ஸ்டார்ட்-அப் பாக பதிவு செய்வதற்கும் தற்போது ஜிஎஸ்டி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற கட்டாயத்தில் தான் எங்களின் ஜிஎஸ்டி வாடிக்கையாளரும் மாட்டிக் கொண்டுள்ளார், பொதுவாக நமது ஜிஎஸ்டி எண்ணினுள் விலைப்பட்டியல் ஏறி நிற்கதவரை எந்த ப்ராப்ளமும் இல்லை, அதுவரை நில் ரிட்டர்ன் செய்யலாம் எந்த ப்ராபளமும் இல்லை.
கடைசியாக அவரிடம் நாங்கள் கூறியதாவது, தற்போது ஜிஎஸ்டி எண் எடுப்பதற்கு மிகவும் கடினம் ஆக்கப்பட்டுள்ளது,நேரடியாக வந்து ஆய்வு செய்த பின்புதான் ஜிஎஸ்டி எண் வருகிறது,நமது அப்ளிகேஷனை பிராசஸ் செய்வதற்கும் தாமதமாகிறது, அதேபோல் ஜிஎஸ்டி கேன்சல் செய்வதும் சுலபம் இல்லை என்பதையும் புரிய வைத்தோம், ஒருமுறை ஜிஎஸ்டி எண் எடுத்துவிட்டு கேன்சல் செய்தால் மீண்டும் அதே நபர் ஜிஎஸ்டி எடுக்கும் பட்சத்தில் பெரிய கேள்விகளை ஜிஎஸ்டி அதிகாரிகள் எழுப்புவார்கள், அதேபோல் ஜிஎஸ்டி கேன்சல் செய்யும்போது தங்களிடம் எந்த ஸ்டாக்கும் இல்லை என்பதனை கேன்சல் ஆடர் வந்த பின்பும் மூன்று முறை படிவத்தின் மூலம் தெரிவிக்க வேண்டும். அதனை ஜிஎஸ்டி அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளவே இரண்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகலாம்,அதுவரையும் ஜிஎஸ்டி ரிட்டர்ன் கட்டாயம் செய்து ஆக வேண்டும் என்பதனையும் கூறினோம்.
பின்பு அவர் தெரிவித்ததாவது நில் ரிட்டன் ப்ராப்ளம் இல்லை என்றால் இதனை தொடருவதில் எனக்கு ப்ராப்ளமும் இல்லை என்றும், ஜிஎஸ்டி எண் அப்படியே இருக்கட்டும் என்று சொன்னார், தெளிவான விளக்கம் அளித்ததற்கு நன்றி என்றும் தெரிவித்து அழைப்பினை முடித்துக்கொண்டார்.
(குறிப்பு : ஜிஎஸ்டி எண் எடுப்பதை காட்டிலும், ஜிஎஸ்டி எண்ணை கேன்சல் செய்வது தான் கடினம்.)