நீங்கள் GST Return தாக்கல் செய்யும் முறையில் மீண்டும் மாற்றம்:வருகின்ற ஜனவரி 1 முதல், நீங்கள் GST 1 Return மட்டும் முழுமையாக தாக்கல் செய்தால் போதும். உங்களுடைய அனைத்து விவரங்களும் Auto Populate எனப்படும் முறையில் உங்களுடைய ITC 2B கொண்டு வந்து தாமாக தயார் செய்யப்பட்ட 3B படிவம் தயாராக இருக்கும்… முதல் முறையாக GST யின் Advanced Tax எனும் முறையில் உங்களுடைய போன காலாண்டு return நீங்கள் கட்டிய தொகையிலிருந்து 35 சதவீதத்தை auto populate செய்யப்பட்ட Challan மூலம் நீங்கள் கட்டலாம். மூன்று மாத இறுதியில் உங்களுடைய முழுமையான விபரங்களை நீங்கள் சரி செய்து Final Tax கட்டவேண்டும். ஜனவரி முதல் ஒவ்வொரு மாதமும் நீங்கள் கட்டவேண்டிய தொகை பற்றிய விவரம் தயாராக இருக்கும். நீங்கள் Challan மட்டும் கட்டினால் போதும்…. Composition Scheme செய்பவர்கள் CMP08 NIL Return செய்யலாம். Refund File செய்து வாங்குபவர்கள் Monthly return முறையை தேர்வு செய்து கொள்ளுங்கள்.. மேலும் உங்களுடைய PAN மற்றும் AADHAR இணைப்பு இருந்தால் மட்டுமே இனி உங்களுக்கு Refund கிடைக்கும். வருகிற 2021 ஆம் ஆண்டு முதல் நீங்கள் உங்களுடைய பொருட்களுக்குன்டான HSN code குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. GSTR1 – 5 கோடிக்கு குறைவாக உள்ளவர்கள் 4Digit HSN Code , 5 கோடிக்கு மேலே உள்ளவர்கள் 6Digit HSN code யை தங்களுடைய GST 1 மற்றும் Invoice -ல் கட்டாயம் குறிப்பிட வேண்டும். GST தாக்கல் முறையை பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கு எங்களுடைய INTAXSEVA வாட்ஸ்அப் எண் 8903330035 யை தொடர்பு கொள்ளவும். அல்லது எங்களது INTAXSEVA முகநூல் பக்கத்தை பின்பற்றுங்கள்.