194Q அப்டினா Purchase தொடர்புடைய பிரிவு தான்.இப்போ நான் ஒரு கம்பெனி வச்சிருந்தால் அந்த கம்பெனில என்னோட முந்தைய ஆண்டு அதாவது கடைசி நிதி ஆண்டோட தற்போதைய Turnover or Cross-receipt from sales.
Cross-receipt from sales-னா Sales மூலமாக பணம் Receive பண்ணி இருப்போம் அது அப்படி இல்லைனா Turnover 10crore, இது கடந்த நிதியாண்டில இருக்கணும்.10 கோடி இல்ல அதுக்கு மேல இருக்கணும்.அப்டி இருந்தாலுமே நடப்பு நிதியாண்டுல நான் ஒரு குறிப்பிட்ட சப்ளையர் கிட்ட இருந்து ஒரு 50 லட்சத்துக்கு மேல பொருள் வாங்கி இருக்கணும் அப்டி இருந்த தான் 50 லட்சத்துக்கு மேல வாங்குனோம்ல அவங்களுக்கு நாம TDS புடிக்கலாம் இந்த 2 நிபந்தனைகளும் கரெக்ட்டா இருக்கணும் அப்படி இருந்தா தான் இந்த Section நமக்கு பொருந்தும்.
194Q-ல லிமிட் இது தான் 10crore தாண்டி இருக்கணும் நடப்பு நிதியாண்டுல 50 லட்சத்துக்கு வாங்கி இருக்கணும் அப்டி இருந்தா நாம TDS புடிக்கலாம்.இது 1st ஜூலை 2021-ல இருந்து தான் கொண்டுவந்தாங்க.இது யாரு TDS Deduct பண்ணனும் அப்டினா Purchase பண்றவங்க தான் TDS Deduct பண்ணனும்.Purchase பண்ற அவங்க கம்பெனி தான் 10crore Turnover வச்சிருக்கணும்.
இப்போ நாம எப்படி TDS deduct பன்றோம் எப்படி calculate பன்றோம்னு பார்க்க போறோம்.இப்போ 70,00,000 (taxable value) வரி விதிக்கக்கூடிய மதிப்பாக இந்த நடப்பு நிதியாண்டுல வாங்கி இருக்கேன். 50,00,000 ரூபாவை அந்த லிமிட்ல இருந்து கழிச்சிரலாம்.மீதம் 20,00,000 தான் இருக்கு. அந்த 20லட்சத்துல 0.1% TAX Calculate பண்ணோம்னா எனக்கு 2000 வரும்.