Digital Signature என்றால் என்ன என்று ஒரு நண்பர் கேட்டிருந்தார். அதற்கான விளக்கம் நீங்கள் ஒரு விஷயத்திற்கு ஒப்புக்கொள்கிறீர்கள் என்பதை எழுத்துபூர்வமாக பதிய கையெழுத்து பயன்படுகிறது. ஒவ்வொருவர் கையெழுத்தும் வித்தியாசம் இருக்கும் என்ற அடிப்படையில் மூன்று நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்று டிஜிட்டல் உலகில் ஒவ்வொருவருக்கும் கைபேசி வந்தவுடன் அந்த எண்ணிற்கு ஒரு OTP கொடுத்து அதை ஒப்பமாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் அதிலும் சிக்கல் என்னவென்றால் சம்பந்தப்பட்டவரின் கைபேசி இருந்தால் யார் வேண்டுமென்றாலும் அதை ஒப்பமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். உங்களது கைபேசி Hack செய்யபட்டால் இதை சாதிப்பது எளிது.அதற்கும் ஒருபடி மேலே சென்று உறுதிசெய்வது தான் Digital Signature.இதை உலகம் முழுக்க பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தியாவில் இதை வழங்க சில நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன்படி ஒரு லிங்க் உங்களது Emailக்கு அனுப்பப்படும். அதை கிளிக் செய்து வரும் வீடியோ கேமரா(Mobile/Laptop)வில் உங்களை நீங்கள் அறிமுகப்படுத்தி பதியவேண்டும். உதாரணத்திற்கு “நான் தான் கார்த்திகேயன் என்பதை எனது அடையாள அட்டையை கையில் வைத்துக்கொண்டு பேசி ஒப்புவிக்க வேண்டும்” அதை வைத்துக்கொண்டு உங்கள் விவரங்களையும் பதிந்து உங்களுக்கு ஒரு Signature Token அனுப்பிவைப்பார்கள். அந்த Signature Tokenஐ வைத்து நீங்கள் உங்களின் ஒப்புதலை உறுதிபடுத்த பயன்படுத்தலாம். மிகவும் பாதுகாப்பானது. இந்தியாவில் IT Returns, GST Registration and Filing தாக்கல் செய்ய Aadhaar இல்லாதவர்கள் இந்த முறையை பயன்படுத்தி பதியலாம். மேலும் சில முக்கியமான பதிவுகளுக்கு இவை மிக அவசியம். அவை Company Incorporation, Trade Mark Registration, Import Export Code ஆகியவற்றை சொல்லலாம். முன்பு Class1 இருந்தது. அதன் பிறகு Class2 வகை DSC இருந்தது. இப்போது அதையெல்லாம் ஒழித்துவிட்டு Class 3 தான் பயன்படுத்த வேண்டும் என்று அறிவித்துவிட்டார்கள். Class-3 DSC மிகவும் பாதுகாப்பானது. மேலும் இதை பயன்படுத்தி நீங்கள் எந்த PDF Documentலும் ஒப்புதல் கொடுக்கமுடியும்.