தொழில் தொடங்குபவர்கள் எந்த நிறுவனமாக பதிவு செய்து தொழிலை ஆரம்பிக்கலாம் என்பதை பற்றி தான் பார்க்கப் போகின்றோம்…..தொழிலுக்கான முதலீடு, தொழில் பற்றிய அறிவு, தொழில் அனுபவம், இதன் அடிப்படையில் நமக்கான நிறுவனம் எது என்பதை தேர்ந்தெடுக்கலாம் முதலில் நாம் தொழில் தொடங்கும் போது தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ள நிறுவனம் வகைகளை பார்க்கலாம் 1) தனிநபர் நிறுவனம் (Sole Proprietorship)2) கூட்டுத் தொழில் நிறுவனம் (Partnership Firm)3) தனிநபர் பங்கு நிறுவனம் (Private Limited)4) பொதுப் பங்கு நிறுவனம் (Public Limited)முதலில் தனிநபர் நிறுவனம் என்றால் என்னவென்று பார்ப்போம், நம்மை சுற்றி இருக்கும் சிறிய கடைகள் முதல் ஒரு சில பெரிய கடைகள் வரைக்கும் தனிநபரால் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் தான்.இந்த தனிநபர் நிறுவனத்தை பதிவு செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை ஆனால் சம்பந்தப்பட்ட பதிவுகள் அவசியம் ஒரே ஒரு நபர் தன்னுடைய கை பணத்தை கொண்டு அல்லது கடன் வாங்கிய பணத்தைக் கொண்டு ஒரு தொழில் நிறுவனத்தை நடத்திக் கொண்டு வருகிறார் என்றால் அந்த நிறுவனம் மூலமாக வருகின்ற லாபம் மற்றும் நஷ்டம் அனைத்தும் அந்த நபரை மட்டுமே சேர்ந்ததாக இருக்கும் அந்த நிறுவனத்தின் பொறுப்புகள் அனைத்தும் அவரை மட்டுமே சாரும் இந்த வகையான நிறுவனத்தை தனிநபர் நிறுவனம் அதாவது Sole Proprietorship என்று சொல்வோம்.உங்களிடம் தொழிலுக்கான திட்ட மிட்ட முதலீடு, துறைசார்ந்த அறிவு தொழில் அனுபவம் இருக்கும் பட்சத்தில் நீங்கள் தனிநபர் நிறுவனமாக தொடங்கலாம்.அடுத்ததாக கூட்டு தொழில் நிறுவனம் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் கூட்டு சேர்ந்து தொழில் தொடங்க ஆசைப்பட்டால் அவர்களுக்கு இருக்கின்ற மிகச்சிறந்த வாய்ப்பாக கூட்டுத் தொழில் நிறுவனம் இருக்கும், இந்தக் கூட்டுத் தொழில் நிறுவனத்தை ஆடிட்டர் மூலமாகவும் அல்லது அவரின் உதவியாளர் மூலமாக மாவட்ட பதிவு அலுவலகத்தில் பதிவு செய்வதன் மூலமாக இந்த நிறுவனத்தை தொடங்கலாம் இதற்கென்று தனியாக பத்திரம் எழுதி யார் யார் எவ்வளவு முதலீடு யார் யாருக்கு எவ்வளவு லாபம் என அனைத்து தகவல்களையும் பதிவு செய்யலாம் பதிவு செய்து பத்திலிருந்து பதினைந்து நாட்களுக்குள் டாக்குமெண்ட் கிடைக்கும், இந்த நிறுவனம் ஆரம்பிக்கும் குறை என்னவென்றால் இந்த நிறுவனத்தை ஒவ்வொரு வருடமும் ரெனிவல் செய்ய வேண்டும் அப்படி செய்யாத பட்சத்தில் அந்தப் பத்திரம் செல்லாததாகிவிடும் இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் கூட்டாளிகள் அதாவது பார்ட்னர் என்று அழைப்பார்கள் இதில் வருகின்ற லாபம் நஷ்டம் எதுவாக இருந்தாலும் டாகுமெண்ட்டில் சொன்னது போல் அவரவருக்கான பங்கு பிரித்து கொள்ளவேண்டும்.நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கு அனைவரும் பொறுப்பாவார்கள் இதில் அதிகபட்சம் பத்து நபர்கள் வரை கூட்டாளியாக சேரலாம் இந்த நிறுவனத்தின் நடவடிக்கைகள் மூலமாக ஏதாவது கடன் ஏற்பட்டாலோ அல்லது நிறுவனம் திவால் ஆகும் பட்சத்தில் கூட்டாளிகள் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் சொத்தை பறிமுதல் செய்ய கடன் கொடுத்தவருக்கு உரிமை உண்டுஇந்த கூட்டு தொழில் நிறுவனத்தை சேர்ந்த ஒருவரிடம் பணமும் இன்னொருவரிடம் தொழில் துறை சார்ந்த அறிவும் இன்னொருவரிடம் தொழில் அனுபவம் இருக்கும் பட்சத்தில் இவர்கள் அனைவரும் இணைந்து தொழில் தொடங்க மிகச் சிறந்த வாய்ப்பாக இந்த கூட்டுத் தொழில் நிறுவனம் இருக்கும். பிரைவேட் லிமிடெட் நிறுவனம் என்றால் என்ன ??லிமிடெட் நிறுவனம் அதாவது வரையறுக்கப்பட்ட நிறுவனம் ஒரு கூட்டுத் தொழில் நிறுவனம் செயல்படும்போது தனிப்பட்ட முறையில் அந்த நிறுவனத்தின் கடன் தொகைக்கு உரிமையாளர்கள் பொருப்பாவார்கள் ஒரு தொழில் விரிவாக்கப்படும் போதோ அல்லது பெரிய அளவில் தொடங்கும் போதோ இத்தகைய பொறுப்புக்களை தவிர்க்கவும் மற்றும் பல்வேறு நிர்வாக வசதிக்காகவும் வரையறுக்கப்பட்ட நிறுவனம் உருவாக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் கடன் என்பது அவர்கள் முதலீடு செய்த பணம் அளவிற்கே வரையறுக்கப்படுகிறது இதுவே வரையறுக்கப்பட்ட பங்கு நிறுவனம் அதாவது லிமிடெட் கம்பெனியின் கடனுக்கு பங்குதாரர்கள் பொறுப்பாக மாட்டார்கள் ஒருவேளை தொழில் நிறுவனம் திவால் ஆகும் பட்சத்தில் கடனை திருப்பி செலுத்தாத பட்சத்தில் நிறுவனத்தின் சொத்துக்களை மட்டும் கையகப்படுத்தும் உரிமை கடன் கொடுத்தவருக்கு உண்டு, நிறுவனத்தின் பங்குதாரர்கள் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் சொத்து எந்தவித உரிமையும் கோர முடியாது. அதாவது தனிப்பட்ட சொத்தை விற்று கடனை அடைக்க வேண்டும் என்ற விதி கிடையாது ஏனென்றால் தனி நபராக பார்க்கப்படுகிறது இதில் இரண்டு வகை உள்ளது முதலில் பிரைவேட் லிமிடெட் கம்பெனி அதாவது தனிநபர் பங்கு நிறுவனம் அல்லது தனிநபர் வரையறுக்கப்பட்ட பங்கு நிறுவனம், இந்த நிறுவனத்தை உருவாக்க குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாயும் ஒரு மாத கால நேரமும் தேவை இதில் அதிகபட்சம் 200 நபர்கள் வரை பங்குதாரர்களாக சேரலாம் தொழில் சிறப்பாக செயல்பட்டு விரிவாக்கம் செய்தால் இன்னும் பெரிய அளவில் வளர்ச்சி எடுக்கலாம் என்ற நிலைமை இருக்கும்பொழுது நிறுவனத்திற்கு தேவைப்படும் மூலதனத்தை பெறாமல் அவற்றை பங்குகளாக மாற்றி முதலீட்டாளர்கள் கொண்டு எல்லாம் அவர்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு நிறுவனத்தின் பங்கு கேட்பார்கள் பொதுவாக ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படும் போது அந்த நிறுவனம் பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக இருக்கும் பட்சத்தில் முதலீட்டாளர்களை அதிகம் விரும்புவார்கள் ஏனென்றால் இத்தகைய நிறுவனத்தில் ஒருமுறை பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ளப்படும் ஒருவரை அந்த நிறுவனத்தில் இருந்து யாரும் எளிதில் வெளியேற்ற முடியாது.பொதுமக்களிடம் பங்கை விற்பனை செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது இதுமட்டுமில்லாமல் பிரைவேட் லிமிடெட் கம்பெனி உருவாக்குவதற்கு லாபகரமான பல விஷயங்கள் இருக்கின்றன.பொதுப்பங்கு வரையறுக்கப்பட்ட நிறுவனம் தனியார் நிறுவனங்கள் காலப்போக்கில் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்படும் போது இத்தகைய பொது நிறுவனங்கள் உருவாக்கப்படுகின்றன இந்த வகையான நிறுவனத்தை நடத்துவதற்கு கோடிக்கணக்கான பணத்தை பொதுமக்களிடமிருந்து நிதியாக திரட்டி கொள்ளலாம் இந்தவகை நிறுவனங்களை உருவாக்குவதில் பல்வேறு சட்ட திட்டங்களை கடைப்பிடிக்க வேண்டியிருக்கும் இதை வேறு விதமாக சொல்வதென்றால் பொதுமக்களையும் தங்களுடைய நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக சேர்த்துக் கொண்டு நிறுவனத்தின் லாப நஷ்டத்துக்கு பொறுப்பானவர்கள் மாற்றப்படுகிறார்கள் இதில் தங்களிடம் இருக்கும் பொது மக்களிடம் விற்பனை செய்யலாம் ரிலையன்ஸ், டாடா, பிர்லா போன்ற மிகப் பெரிய நிறுவனங்களுக்கு பல லட்சம் முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்கள் இந்த நிறுவனம் கிட்டத்தட்ட பிரைவேட் லிமிடெட் கம்பெனி போலத்தான் , பங்குச்சந்தை என்றால் என்ன என்பதை எல்லாம் பார்த்துவிட்டு பப்ளிக் லிமிடெட் கம்பெனி தொடங்குவதாக இருந்தால் மிகச் சிறந்த வாய்ப்பாக இருக்கும்.