வருமான வரியில் சலுகை பெறும் வழிகள்….. வருமான வரி செலுத்துவதில் இருந்து சில விதிகளின் கீழ் விலக்கு அளிக்கிறது வருமான வரித்துறை அவற்றை பயன்படுத்தி வருமான வரி செலுத்தும் அளவை எப்படி குறைப்பது என்பதை இங்கே காணலாம். 80C விதியின்படி ஓர் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை வருமான வரியை சேமிக்கலாம் ஆயுள் காப்பீடு பிரீமியம் உள்ளிட்ட வருமான வரி விலக்கு அளிக்கும் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் வரி செலுத்தும் தொகையை குறைக்கலாம். தனக்காகவோ, மனைவிக்காகவும், குழந்தைகளுக்காகவும் ஆயுள் காப்பீடு செய்தால் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது அதற்கும் சில விதிகள் உண்டு. இந்து பிரிக்கப்படாத குடும்பம் என்றால் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் ஆயுள் காப்பீடு எடுக்கும் போது வருமான வரி விலக்கு இருக்கிறது.தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்திருந்தால் கூடுதலாக ஐம்பதாயிரம் ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம் அதாவது மொத்தம் மூன்று லட்ச ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம், இந்த முதலீடுகள் ஒரு நபர் தன் பெயரில் செய்யாமல் தன் குடும்பத்தின் பெயரில் எடுத்திருந்தாலும் வரிவிலக்கு கிடைக்கும் அதாவது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் ஆயுள் காப்பீடு, பொது வைப்பு நிதி ஆண்டுக்கு ஒரு முறை வருமானம் தரும் நிதி திட்டங்களில் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் முதலீடு செய்திருந்தால் வருமான வரியிலிருந்து சலுகை கிடைக்கும் பெண் குழந்தைகள் பெயரில் முதலீடு களுக்கு கிடைக்கும் வரி விலக்கு சுகன்யா சம்ரிதி (Sukanya Samriddhi Yojana) என்ற கணக்கில் பெண் குழந்தைகள் பெயரில் பணம் செலுத்தினால் 80C விதியின் கீழ் வருமான வரியிலிருந்து விலக்கு கிடைக்கும் மேலும் இரண்டு குழந்தைகளுக்கான கல்வி கட்டணத்தையும் வருமான வரிவிலக்கு பெறுவதற்கு காரணமாக பயன்படுத்தலாம். வீடு மற்றும் நிலம் வாங்கும் போது செலுத்தும் ஸ்டாம்ப் வரி மற்றும் பதிவுக் கட்டணம் தொழிலாளர் வைப்பு நிதி , PF ஐந்து ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்பு நிதி , FD கணக்கில் பராமரித்தாலும் வரிவிலக்கு கிடைக்க வழிவகை செய்யும் வருமான வரி விலக்கு அளிக்கும் மேலும் சில முதலீடுகள் இங்கே வருமான வரி விதி முதலீட்டு திட்டங்கள், வரி சலுகை அளவு 80D மருத்துவ காப்பீடு இவற்றில் குறைந்தபட்ச தொகை அசல் தொகை அல்லது 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை மூத்த குடிமக்களுக்கு கூடுதல் சலுகை, 80DD மாற்றுத்திறனாளிக்கான மருத்துவ செலவு 75 ஆயிரம், ஒரு லட்சத்து 25 ஆயிரம் மிகத்தீவிரமான இயலாமை 80DDB மருத்துவ செலவுக்கான வரிச்சலுகை இவற்றில் குறைந்தபட்ச தொகை அசல் தொகை அல்லது 40 ஆயிரம் ஒரு லட்சம் ரூபாய் மூத்த குடிமக்களுக்கு 80E கல்விக்கடன் வட்டி வட்டி தொகைக்கு வரிச் சலுகை இவற்றில் குறைந்தபட்ச தொகை 80EE வீட்டுக் கடன் வட்டி அசல் தொகை அல்லது 50,000 இவற்றில் குறைந்தபட்ச தொகை 80 GG வீட்டு வாடகை மொத்த வருமானத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தால் அல்லது 25 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தால் அல்லது 5 ஆயிரம் மாதத்திற்கு 80U மாற்றுத்திறனாளிக்கான ஊக்கத்தொகை 75 ஆயிரம், 1 லட்சத்து 25 ஆயிரம் மிகத்தீவிரமான இயலாமை