சமீபத்துல நிறைய News Websites-ல இப்படி ஒரு Title-அ நீங்க பாத்திருக்கலாம். படிக்கிறப்போ நமக்கே ஒரு நிமிஷம் ஷாக் ஆகும்! ஏன்னா இப்ப நிறைய பேர் New Tax Regime-க்கு மாறிட்டு இருக்கோம்.
ஆனா, உண்மைய சொல்லணும்னா இந்த News ஒரு பக்கா ‘Clickbait’!
ஏன்னா, அவங்க லிஸ்ட் பண்ண 10 விஷயங்கள்ல ஒன்னு, ரெண்ட தவிர மத்த எல்லாமே Old Tax Regime, New Tax Regime என ரெண்டுலயுமே முழுசா Tax-Free தான்!
வாங்க, அந்த லிஸ்ட்ல இருக்குற உண்மை நிலவரத்தை ரொம்ப சிம்பிளா பாப்போம்:
✅ ரெண்டு Regime-லயும் (Old & New) Tax இல்லாத Incomes:
1️⃣ Agricultural Income: விவசாயம் மூலமா வர்ற Income-க்கு எப்போதுமே Tax கிடையாது!
2️⃣ Gifts: கல்யாண மொய் மற்றும் நெருங்கிய சொந்தக்காரங்க (அப்பா, அம்மா, கணவன்/மனைவி) கொடுக்கும் பணம்.
3️⃣ Life Insurance: LIC அல்லது மற்ற Policies-ல இருந்து வரும் Maturity Amount & Death Benefit.
4️⃣ PPF & EPF: PPF-ல் வரும் Interest மற்றும் Maturity Amount. அதேபோல 5 வருஷத்துக்கு மேல தொடர்ந்து வேலை செஞ்சுட்டு EPF Amount-அ Withdraw பண்ணாலும் Tax இல்லை.
5️⃣ Gratuity: 5 வருஷத்துக்கு மேல ஒரே கம்பெனில வேலை செஞ்சா கிடைக்கும் பணம்.
6️⃣ Scholarship: படிப்புக்காக வாங்கும் Scholarship பணத்துக்கு எப்போதுமே எந்த Tax கிடையாது.
7️⃣ Tax-Free Bonds & Partnership Profit: குறிப்பிட்ட Government Bonds மற்றும் Partnership Business-ல் கிடைக்கும் Profit Share.
❌ அப்போ Old Regime-ல் மட்டுமே Tax Exemption உள்ளவை என்ன?
அவங்க சொன்ன லிஸ்ட்ல LTA (Leave Travel Allowance) அதாவது குடும்பத்தோட ஊர் சுத்தி பார்க்க கம்பெனி கொடுக்கும் allowance-க்கு மட்டும்தான் Old Tax Regime-ல் Tax Exemption உண்டு. (New Regime-ல் இதற்கு Tax கட்டணும்).
சுருக்கமா சொன்னா: PF, விவசாயம், Insurance, Gift எல்லாமே ரெண்டு Regime-லயுமே Tax-free தான். அதனால News Title-அ பார்த்து தேவையில்லாம கன்ஃபியூஸ் ஆகிக்காதீங்க!
நீங்க இந்த வருஷம் Old Regime Select பண்ணிருக்கீங்களா? இல்ல New Regime-ஆ? கமெண்ட்ல சொல்லுங்க! Tax பத்தி உங்களுக்கு ஏதாச்சும் Doubt இருந்தாலும் கேளுங்க.
