அவரு work பண்ண Company-ல மாசா மாசம் கரெக்டா Salary-ல இருந்து TDS (Tax) புடிச்சிட்டு தான் balance salary-ய account-ல போட்டுருக்காங்க. Payslip-லயும் அது கிளியரா mention ஆகியிருக்கு. ஆனா, அந்த company அந்த tax amount-அ Government-க்கு pay பண்ணவே இல்ல.
அவரு பாட்டுக்கு ITR file பண்ணும்போது பார்த்தா, Form 26AS-ல tax கட்டுனதுக்கான எந்த record-ம் இல்லாம Zero (0)-னு காட்டுது. அவரு அத பாக்காம அவரோட Payslip Deduct பண்ண TDS வச்சு Filing பண்ணி முடிச்சிட்டாரு. கொஞ்ச நாள் கழிச்சு, “உங்களுக்கு கிட்டத்தட்ட 2 லட்சம் tax balance இருக்கு (Outstanding Demand), உடனே கட்டுங்க”னு Income Tax Department-ல இருந்து ஒரு பெரிய notice வந்துடுச்சு.
இதை பார்த்துட்டு அவரு ரொம்ப panic ஆகிட்டாரு. மறுபடியும் நம்ம கைக்காச போட்டு அந்த வரியை கட்டணுமானு கேட்டாரு. ஆனா அதுக்கு அவசியமே இல்லை!
இதுக்காகவே Income Tax Act-ல ‘Section 205’ அப்படின்னு ஒரு rule இருக்கு. அது என்ன சொல்லுதுன்னா, “ஒரு employee salary-ல இருந்து company வரியை புடிச்சிட்டு, அதை Government-க்கு கட்டலனா, அதுக்கு அந்த company தான் பொறுப்பு. அந்த பணத்தை Government, company கிட்ட தான் collect பண்ணனுமே தவிர, employee கிட்ட கேக்கக் கூடாது”.
சரி, எங்க Client-க்கு நாங்க என்ன பண்ணோம்? உங்களுக்கு இந்த மாதிரி notice வந்தா என்ன பண்றது?
முதல்ல notice-அ பார்த்து panic ஆகாதீங்க, அதே சமயம் ignore பண்ணவும் கூடாது.
Company கொடுத்த Payslips (TDS புடிச்சதுக்கான proof), அப்புறம் Bank Statement (salary credit ஆன proof) எல்லாத்தையும் PDF-ஆ ready பண்ணி வெச்சுக்கோங்க.
Income Tax portal-ல login பண்ணி ‘Pending Actions’ -> ‘Response to Outstanding Demand’ போயிட்டு ‘Disagree with demand’ select பண்ணுங்க.
“என் salary-ல company tax புடிச்சிட்டாங்க, அவங்க தான் கட்டல. Section 205 படி என்கிட்ட இந்த demand-அ கேட்க கூடாது”னு reason எழுதிட்டு, அந்த proof எல்லாத்தையும் upload பண்ணிடுங்க.
Notice-ல இருக்கிற Assessing Officer-க்கும் இதையே எல்லா documents-ம் attach பண்ணி ஒரு mail-ஆ தட்டி விட்டுடுங்க.
அவ்வளவு தான்! Issue solve ஆகிடும். நாங்க எங்க client-க்கு இதைத்தான் பண்ணி அந்த demand-அ clear பண்ணோம்.
நிறைய பேருக்கு (முக்கியமா recently close ஆன சில பெரிய companies-ல work பண்ணவங்களுக்கு) இந்த மாதிரி notice இப்போ வந்துட்டு இருக்கு. உங்க friends யாருக்காவது இந்த மாதிரி issue இருந்தா அவங்களுக்கு இந்த post-அ share பண்ணி help பண்ணுங்க. அப்டியே நம்ம Page-அ Follow பண்ணிக்கோங்க.
