வருமான வரி தாக்கல் செய்த பின் வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்தால் அதற்கு எப்படி முறையாக பதில் அளிப்பது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது.வருமான வரித்துறை, வரிதாக்கல் செய்தவர்கள் அளித்துள்ள ஆவணங்கள் மற்றும் விவரங்கள் சரியில்லை என சந்தேகம் இருந்தாலும் சரி பார்க்க விரும்பினாலும், சம்பந்தப்பட்ட நபருக்கு நோட்டீஸ் அனுப்புவார்கள்.இதை பொதுவாக ஸ்க்ருடினி நோட்டீஸ் (Scrutiny Notice) என்று கூறுகிறார்கள் இந்த நோட்டீஸ் வந்துவிட்டால் பயப்பட வேண்டாம். சுமூகமாக இந்த நோட்டீசுக்கு பதில் அளிக்கலாம். முதலில் இந்த நோட்டீஸ் இரண்டு வகையானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் குறிப்பிட்ட விவரங்களை மட்டும் கூறுவது லிமிடெட் வகை நோட்டீஸ்(Limited Notice), முழுமையான ஆவணங்கள் மற்றும் விவரங்களை கூறுவது கம்ப்ளீட் வகை நோட்டீஸ்(Complete Notice) .இதில் எந்த வகையான நோட்டீஸ் வந்திருக்கிறது என்பதை பொறுத்து பதிலளிக்க வேண்டும். வருமான வரி தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து ஆறு மாதங்களுக்கு வருமான வரி நோட்டீஸ் அனுப்பப்படும் உதாரணமாக 2017-2018 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் ஜூலை 31, 2018ல் செய்யப்பட்டால் ஜனவரி 31, 2019க்குள் நோட்டீஸ் வரவேண்டும். இந்த அவகாசத்திற்குள் நோட்டீஸ் வந்து இருக்கிறதா என்பதை நோட்டீஸில் உள்ள தேதியை பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும். அந்த அவகாசத்தில் இல்லை என்றால் அதை வருமான வரி அதிகாரிகள் தெரிவிக்கலாம். பொதுவாக வருமான வரி நோட்டீஸ் வந்தால் சம்பந்தப்பட்ட நபரோ அல்லது அவரின் பிரதியாக அவருடைய வழக்கறிஞர் அல்லது கணக்குத் தணிக்கையாளர் நேரில் ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும் ஆனால் இந்த நடைமுறை எளிமையாக்கி e-proceeding என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட விவரங்கள் மட்டும் கூறும் நோட்டீசுக்கு இந்த வருமான வரித்துறை இணையத்தின் மூலம் பதிலளிக்கலாம். வருமான வரித் தாக்கல் உள்ள பெயர் மற்றும் PAN எண் குறிப்பிட்ட நிதியாண்டு ஆகியவற்றை உறுதி செய்துகொள்ளும் நோட்டீஸ் அனுப்பப்படும்.அவற்றை Online-யில் முடிக்கும் வசதியும் உள்ளது. எந்த வகையான நோட்டீஸ் அளிக்கப்படுகிறதோ அதற்கேற்ற ஆவணங்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி அறிவுறுத்தப்படும். குறிப்பிட்ட தேதிக்குள் ஆவணங்களை தயார் செய்ய முடியாவிட்டால் அவகாசத்தை நீட்டிக்க கேட்டுக்கொள்ளலாம் இவ்வாறு விண்ணப்பிக்கும் போது தவறாமல் PAN எண் மற்றும் எந்த நிதியாண்டிற்கான என்பதை குறிப்பிட வேண்டும். நேரில் ஆஜராக வேண்டிய கட்டாயம் இருந்தால் குறிப்பாக தேதிக்குள் நேரில் ஆஜராகி விட வேண்டும். இல்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டிய நிலை உருவாகும்.ஆவணங்களை பரிசோதிக்கும் வருமான வரி அதிகாரி சமர்ப்பிக்கப்பட்ட விவரங்களை ஏற்கவும், மறுக்கவும் சாத்தியம் உண்டு என்பதால் எப்போதும் சரியான ஆவணங்களை தயாராக வைத்திருப்பது நல்லது