தற்பொழுது Income Tax filing முடிந்துவிட்ட நிலையில், இப்பொழுது அடுத்த Financial Year-க்கு வருமான வரியை எப்படி குறைப்பது என்று வாடிக்கையாளர்கள் எங்களிடம் கேட்டு வருகின்றனர். நாங்கள் அவர்களிடம் நீங்கள் பொதுவாக காட்டும் உங்கள் expenses-யை சமர்ப்பித்து விடுங்கள், அதை தவிர்த்து Income tax-இல் பல Section உள்ளன.
80C-இல் LIC, ELSS mutual fund, Tuition fee, Home Loan Principal amount எல்லாம் சேர்த்து 1,50,000 வரையிலும்,
80D-இல் நீங்கள் செலவு செய்த medical expenses சேர்த்து 75,000 வரையிலும்,
நீங்கள் Trust donation செய்திருந்தால் அதை 80G-யிலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சிகளுக்கு நன்கொடை அளித்திருந்தால் 80GGC-யிலும்
உங்களது சேமிப்பு வங்கி கணக்கில் வட்டி எதும் பிடித்திருந்தால் 80TTA-இல் 10,000 வரையிலும்,
உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்திருப்போர்கோ நரம்பியல் சம்பந்தமான வியாதிகள் இருந்து அதற்கு மருத்துவ செலவு எதும் செய்திருந்தால் 80DDB-இல் மூத்த குடிமக்களாக இல்லாத பட்சத்தில் 40,000 வரையிலும், மூத்த குடிமக்களாக இருக்கும் பட்சத்தில் 1,00,000 வரையிலும்,
உங்கள் குடும்பத்தில் உங்களை சார்ந்திருப்போர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் 80DD-இல் சாதாரணமாக இருக்கும் பட்சத்தில் 75,000 வரையிலும், தீவிரமாக இருக்கும் பட்சத்தில் 1,25,000 வரையிலும்,
நீங்களே மாற்றுத்திறனாளியாக இருந்தால் 80U-இல் சாதாரணமாக இருக்கும் பட்சத்தில் 75,000 வரையிலும், தீவிரமாக இருக்கும் பட்சத்தில் 1,25,000 வரையிலும்,
நீங்கள் மின்சார வாகனத்திற்காக Loan வாங்கியிருந்தால் 80EEB-இல் 1,50,000 வரையிலும்
வரி விலக்கு கோரலாம்.
மேலும் இது பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் 89033-30035 என்ற எண்ணிற்கு நேரடியாக எங்களை அழைத்து அல்லது வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளவும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.