தங்க நகைகளை அடகு வைத்து வாங்கும் loan-க்கு RBI 9 புதிய விதிமுறைகளை விதித்துள்ளது. இந்த விதிமுறையானது வங்கியும் மற்றும் வங்கி சாரா பிற நிறுவனங்களும் ஒரே மாதிரியான நடைமுறைகளை பின்பற்றுவதற்காக விதித்துள்ளது. அந்த விதிமுறைகள்,
1.அடகு வைக்கும் தங்க நகையின் மொத்த மதிப்பில் 75% சதவீதம் மட்டுமே கடனாக வழங்கப்படும். உதாரணத்திற்கு, நகையுடைய மதிப்பு ரூ.10000 என்றால், கடனாக ரூ.7500 மட்டுமே கிடைக்கும்.
2.அடகு வைக்கும் நபர், அந்த நகைக்கான original bill-யை சமர்ப்பிக்கவேண்டும். இல்லையென்றால், அந்த நகைக்கு அவர் தான் உரிமையாளர் என்பதற்கான உரிய சான்றிதழ், இல்லையென்றால் நகைக்கு உரிமையாளர் நான்தான் என்று ஒரு letter எழுதி கையெழுத்திடவேண்டும்.
3.அடகு வைக்கும் நகைக்கான purity certificate வங்கிகள், வங்கி சாரா நிறுவனங்கள் வழங்கவேண்டும். அதில், தங்கத்தின் தரம், கற்களின் எடை, உலோக கலவை போன்றவையெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும்.
4.நகைகளின் தரம் கட்டாயம் 22 காரட் அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டுமே நகை கடன் வழங்கப்படும்.
5.18 காரட் நகையை அடகு வைத்தால் அதை 22 காரட் தங்கம் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும்.
6.அதிகபட்சமாக 1 கிலோ அல்லது அதற்கும் குறைவாக உள்ள நகைகளுக்கு மட்டுமே நகை கடன் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
7.RBI வெளியிட்டுள்ள விதிமுறைகளில் தகுதியான வெள்ளி ஆபரணங்கள், வெள்ளி நாணயங்களுக்கு கடன் பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், வெள்ளியின் குறைந்தபட்ச purity 925-ஆக இருக்கவேண்டும்.
8.நகை கடன் வழங்கும் கடன் ஒப்பந்தத்தில் அனைத்து விவரங்களும் முழுமையாக இருக்கவேண்டும். தங்கத்தின் மதிப்பு, கடன் நிறைவுறும் காலம், ஏலம் நடைமுறை, ஏலத்திற்கு முன் நகையை திருப்பவதற்கான வழிமுறைகள் அதில் இடம்பெற்றிருக்கவேண்டும் என அறிவுறுத்தப்படுள்ளது.
9.கடன் முழுவதையும் திருப்பி செலுத்திய 7 நாட்களுக்குள் வாடிக்கையாளருக்கு நகையை திருப்பி தரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுள்ளது. அதன் பிறகு தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கு வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் வாடிக்கையாளருக்கு ரூ.5000 செலுத்தவேண்டும் என்று RBI கூறியுள்ளது.