ரீசண்டா ஒரு சூப்பரான Income Tax தீர்ப்பு (ITAT Mumbai) வந்திருக்கு. ஒருத்தங்க இந்தியால இருக்கிற அவங்க வீட்ட வித்துட்டு, அந்த காசுல அமெரிக்கால (Michigan) புது வீடு வாங்குனாங்க. Income Tax காரங்க “இந்தியால வீடு வாங்குனா தான் tax exemption தருவோம்”னு சொல்லிட்டாங்க. ஆனா ITAT அந்தப் பெண்மணிக்கு சாதகமா வரி விலக்கு கொடுத்து தீர்ப்பு சொல்லியிருக்கு!
அப்படி என்னப்பா இந்த Section 54?
நீங்க ஒரு வீட்ட வித்து, அதுல கிடைக்கிற லாபத்த (Long-Term Capital Gains) வச்சு இன்னொரு புது குடியிருப்பு வீடு வாங்குனா, அந்த லாபத்துக்கு நீங்க Tax கட்ட தேவல.
டைம் லிமிட் என்ன?
வாங்குறதுக்கு: பழைய வீட்ட வித்த தேதில இருந்து 1 வருஷத்துக்கு முன்னாடியோ, இல்ல 2 வருஷத்துக்குள்ளயோ புது வீடு வாங்கணும்.
கட்டுறதுக்கு: புதுசா வீடு கட்டுறீங்கன்னா, 3 வருஷத்துக்குள்ள முழுசா கட்டி முடிக்கணும்.
அமெரிக்கால வீடு வாங்குனவங்களுக்கு எப்படி ITAT சப்போர்ட் பண்ணுச்சு?
ஏப்ரல் 1, 2015-க்கு முன்னாடி இருந்த பழைய Income Tax ரூல்ஸ் படி, “புது வீடு இந்தியால தான் வாங்கணும்”னு எந்த கட்டாயமும் இல்ல. உலகத்துல எங்க வேணாலும் வாங்கலாம்னு இருந்துச்சு.
2015 பட்ஜெட்ல தான் அரசாங்கம் ரூல்ஸ மாத்தி, “Exemption வேணும்னா இந்தியால தான் வீடு வாங்கணும்”னு புதுசா கொண்டு வந்தாங்க.
ஆனா இந்தப் பெண்மணி வீடு வாங்குனது 2014-15 டைம்ல (அதாவது ரூல்ஸ் மாத்துறதுக்கு முன்னாடி). அதனால பழைய ரூல்ஸ் படி அவங்களுக்கு Tax exemption கிடைச்சுது.
இப்போ நாம தெரிஞ்சுக்க வேண்டிய முக்கியமான ரூல்ஸ் (Current Rules):
இடம் (Location): இப்போ இருக்கிற ரூல்ஸ் படி (April 1, 2015-க்கு அப்புறம்), Section 54 கீழ Tax exemption வேணும்னா, புது வீடு கண்டிப்பா இந்தியால தான் இருக்கணும். வெளிநாட்டுல வாங்குனா கட்டாயம் Tax கட்டணும்.
Capital Gains Account: புது வீடு வாங்க டைம் இருந்தாலும், ITR ஃபைல் பண்றதுக்குள்ள அந்த காச நீங்க யூஸ் பண்ணலனா, அத பேங்க்ல ‘Capital Gains Account Scheme’ (CGAS)-ல போட்டு வைக்கணும். சாதாரண சேவிங்ஸ் அக்கவுண்ட்ல வச்சா Tax விழுந்துரும்.
Lock-in Period: புது வீடு வாங்குனதுக்கு அப்புறம், அத 3 வருஷத்துக்கு விக்கக் கூடாது. வித்தா, முன்னாடி கிடைச்ச exemption கேன்சல் ஆகி, மொத்தமா Tax கட்ட வேண்டி வரும்.
உங்களுக்கு வீடு வாங்குற/விக்குற ஐடியா இருந்தா, இந்த விஷயங்கள மைண்ட்ல வச்சுக்கோங்க. டாக்ஸ் பிளானிங் பத்தி மேலும் தெரிஞ்சுக்க நம்ம பேஜ்-அ ஃபாலோ பண்ணுங்க.
