சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில்தான் தங்கம் விலையில் ஏற்றமும் இறக்கமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. எனவே நேற்றை போலவே இன்றும் தங்கம் விலை இறங்குமா அல்லது மீண்டும் உயருமா? என்பதை எதிபார்த்துக் கொண்டு இருந்த நிலையில், நேற்று கொஞ்சம் குறைந்த தங்கம் விலை இன்று அது மேலும் உயர்ந்து, ஷாக் கொடுத்துள்ளது.
வாரத்தின் தொடக்க நாளான திங்கள் கிழமையான நேற்று ஒரு கிராம் 85 ரூபாய் குறைந்து 7705-க்கு விற்பனையாகி வந்தது, சவரன் ஒன்றிற்கு 680 குறைந்து 61640-க்கு விற்பனையானது. பட்ஜெட் தாக்கலினை அடுத்து இரண்டு தினங்களுக்கு பின்னர் இந்த விலை குறைவானது இந்த நிலையில், இன்று திடீரென வரலாறு காணாத உச்சத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 அதிகரித்துள்ளது. இதனால், ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.7,810 மற்றும் ஒரு சவரன் ரூ.62,400 ஆக விற்கப்படுகிறது.
டிரம்ப் தற்போது அடுத்தடுத்து புதிய இறக்குமதி வரிகளை விதித்து வருவதும், பாதுகாப்பான முதலீடாக கருதும் தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்துள்ளதும் அதன் விலை உயர காரணமாக கூறப்படுகிறது. மேலும் எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறித்த எந்தவிதமான அறிவிப்பும் இல்லாததன் காரணமாக, இந்த தங்கத்தினுடைய விலை உயர்வானது தொடர்ந்து அதிகரித்து வருவதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
வெள்ளியின் விலையை பொறுத்தவரை, கிராம் ஒன்றிற்கு நேற்றைய தினத்தை விட, அதாவது ₹107, நேற்று விற்பனையாகி வந்தது, இன்று ஒரு ரூபாய் குறைந்து ₹106க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ₹106,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.