ஹேப்பி நியூஸ் கால அவகாசம் நீட்டிப்பு……..2020-21 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் செப்டம்பர் மாதம் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் 2020 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் முதலே கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்ததால் கட்டுப்படுத்த மார்ச் 22 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது ஊரடங்கு காலத்தில் வரி செலுத்துவது போன்ற செயல்பாடுகளில் சிக்கல் ஏற்பட்டதால் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு சேவைகளுக்கான கால அவகாசங்கள் நீட்டிக்கப்பட்ட குறிப்பாக 2019-20 ஆம் ஆண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இயல்புநிலை திரும்பினாலும் பல்வேறு காரணங்களால் கடைசி தேதிக்குள் வரி தாக்கல் செய்வதில் பலருக்கு சிரமம் இருப்பதை கருத்தில் கொண்டு கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது, இந்த நிலையில் தற்போது 2020-21 நிதியாண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது.ஜூலை 31-ஆம் தேதி வரை கால அவகாசம் இருந்த நிலையில் மத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருப்பதால் இந்த அறிவிப்பை வருமான வரித் துறை வெளியிட்டுள்ளது.வரி செலுத்துவோருக்கு இது ஒரு பெரிய நிவாரணமாக அமைந்துள்ளது தற்போதைய அறிவிப்பின்படி 2021 செப்டம்பர் 30-ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது வருமான வரி சட்டம் 1961 119 வது பிரிவின் கீழ் இந்த தளர்வு அளிக்கப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.