CGST, SGST, IGST இது 3 க்கும் உள்ள வித்தியாசம் என்ன அப்படிங்கிறது தான் நாம பார்க்க போறோம். CGST-ன்றது Central Goods and Service Tax-னு சொல்லுவாங்க SGST-ன்றது state Goods and Service Tax-னு சொல்லுவாங்க IGST-ன்றது Integrated Goods and Service Tax னு சொல்லுவாங்க.
இதுல CGST-யும் SGST-யும் எதுக்காக பயன்படுத்துவாங்க அப்டினா ஒரு மாநிலத்துலயே ஒரு பொருளை தயாரிச்சு அங்கேயே விக்கிறாங்க அப்டினா அதுக்கு இது 2-யுமே பயன்படுத்துவாங்க. உதாரணத்துக்கு ஒரு நகை வாங்க நம்ம கடைக்கு போறோம் அப்டினா அங்க 3% GST போட்ருப்பாங்க, அதுல 1.5% SGST-யும் 1.5%-CGST-யும் போட்ருப்பாங்க. அதாவது நம்ம 3% வரில பாதிக்கு பாதி State Government-யும் Central Government-யும் பிரிச்சுப்பாங்க.
IGST-ன்றது எதுக்கு பயன்படுத்துறாங்க அப்டினா நம்ம மாநிலத்துல தயாரிச்சு வேற ஒரு மாநிலத்துல விக்கிறாங்க அப்டினா அதுக்கு தான் IGST பயன்படுத்துவாங்க. அது மட்டும் இல்லாம வெளிநாட்டுக்கு போய் விக்கிறாங்க அதாவது Export பன்றாங்க அப்டினாலும் IGST பயன்படுத்துவாங்க.