அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வருமானவரி மசோதா தாக்கல் பண்ணி இருக்காங்க இதுல அப்படி என்ன முக்கியமான பாயிண்ட்ஸ் எல்லாம் இருக்கு பழைய வருமானவரி சட்டத்தை விட இது வந்து எந்த அளவுக்கு பெஸ்ட்டா இருக்கும் பார்க்கலாம.
முக்கியமா இந்த வருமான வரி சட்டம் நடைமுறைக்கு இந்த வருஷம் வராது. இது எப்ப வரும்னு கேட்டீங்கன்னா 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாசம் முதல்தான் அமலுக்கு வரும்னு சொல்றாங்க. முக்கியமா இந்த வருமான வரி சட்டத்துடைய நோக்கமே எளிமைப்படுத்துதல் அதாவது “அஜித் ஸ்டைலில் சொல்லனும்னா Make it Simple”.
இந்த புதிய வருமானவரி மசோதாவுடைய முக்கியமான நோக்கமே எளிமையான வார்த்தைகள் இருக்கும்னு சொல்லி இருக்காங்க. இது பொதுமக்கள் மற்றும் வருமானவரி அதிகாரிகள் என இரு தரப்பிற்கும் பார்த்தீங்கன்னா ரொம்பவே useful -அ இருக்கும்னு சொல்றாங்க. இதனால தேவையில்லாத வழக்குகள் எல்லாம் குறைக்கப்படும்.
அதாவது இப்ப இருக்க சட்டத்துல இருக்க நிறைய வார்த்தைகள் பார்த்தீங்கன்னா ரொம்பவே குழப்பமாவே இருக்கு. இது வந்து புதிய சட்டத்துல பார்த்தீங்கன்னா இந்த சிக்கல்கள் எல்லாம் தீர்த்து வைக்கப்படும்னு சொல்றாங்க. ஈஸியா சிம்பிளிஃபைடா இருக்கும்னு சொல்றாங்க.
அதுக்கப்புறம் இந்த புதிய மசோதாவுல தனி நபர்கள் பிசினஸ்கள், தொண்டு நிறுவனங்கள், இது மாதிரி ஒவ்வொரு தரப்பிற்கும் பார்த்தீங்கன்னா தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டிருக்காம். பழைய வருமான வரி சட்டம் பார்த்தீங்கன்னா 880 பக்கங்கள் கொண்டதா இருக்கு ஆனா இந்த புதிய வருமான வரி சட்டம் பார்த்தீங்கன்னா 622 பக்கங்கள் மட்டுமே கொண்டதா இருக்கும்னு சொல்றாங்க. அனைத்து தரப்பினருக்கும் எளிதா புரிந்து கொள்ளும் வகையில இந்த சட்டம் வந்து கொண்டு வந்திருக்காங்க.
அதுக்கப்புறம் இனிமேல் Assesment year என்ற வார்த்தையே இருக்காது சொல்றாங்க. அதுக்கு பதிலா வரி ஆண்டு (Tax year) இது மாதிரி ஒற்றைய வார்த்தை மட்டுமே பயன்படுத்தப்படும்னு சொல்றாங்க. அதாவது இதுவரை பார்த்தீங்கன்னா வருமானம் சம்பாதித்த ஆண்டு previous year சொல்லுவாங்க. அதுக்கப்புறம் வரி கணக்கிடப்படும் ஆண்டு பார்த்தீங்கன்னா Assesment year சொல்லுவாங்க. இதனால பல குழப்பங்கள் வந்து ஏற்பட்டிருக்காம் இனி புதிய வருமானவரி சட்டத்தின்படி இரண்டு வார்த்தைகள் சொல்லப்படாது என்று சொல்றாங்க.
வருமானம் சம்பாதிக்கக்கூடிய ஆண்டு பார்த்தீங்கன்னா வெறும் வரி ஆண்டு அப்படின்னு குறிப்பிட்டிருக்காங்க. அதுக்கப்புறம் வரி மாற்றங்கள் இவை அனைத்தும் பார்த்தீங்கன்னா புதிய வருமான வரி சட்டத்திலயும் இருக்கும்னு சொல்றாங்க. எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீங்க இந்த பட்ஜெட்ல 12 லட்சம் வரையுள்ள வருமானத்துக்கு வரி கிடையாதுன்னு சொல்லிட்டாங்க. அதுமட்டுமில்லாம standard deduction பார்த்தீங்கன்னா 75000 அப்படின்னு சொல்லி இருக்காங்க.
ஆக மொத்தம் வந்து 1275000 வரைக்கும் வருமான வரி விலக்கு பண்ணிருக்காங்க. இந்த புதிய வருமான வரி திருத்தப்பட்ட அடுக்குகள் ஆகட்டும் அறிவிப்புகள் ஆகட்டும் இவை அனைத்தையுமே பார்த்தீங்கன்னா புதிய வருமான வரி சட்டத்திலயும் இருக்கும்னு சொல்லி இருக்காங்க. அதுக்கப்புறம் இந்த பழைய வருமானவரி சட்டத்தை ஒப்பிட்டு பாக்குறப்ப புதிய மசோதாவுல 25 லிருந்து 30% பார்த்தீங்கன்னா குறைவாவே இருக்குது. இது வந்து வரி செலுத்துவதற்கான தங்களுக்கான உரிமைகள் எல்லாம் ஈஸியா அண்டர்ஸ்டாண்ட் பண்ண முடியும்னு சொல்றாங்க.
பழைய வருமான வரி சட்டத்துல பார்த்தீங்கன்னா section 10, section 80c, section 80u இதுல எல்லாம் பார்த்தீங்கன்னா விலக்குகள் இருக்கும். இது வந்து புதிய வருமானவரி சட்டத்துலயும் இருக்கும்னு சொல்றாங்க அதுக்கப்புறம் பார்த்தீங்கன்னா காலக்கேடு எல்லாம் வந்து நீடித்திருக்காங்க அதாவது மிஸ் ஆன ஆண்டுகளை பார்த்தீங்கன்னா வருமானவரி தாக்கல் செய்வதற்கான கால அளவு இரண்டு வருஷத்துல இருந்து நான்கு வருஷமா நீடிக்கப்பட்டிருக்கு. இதை வந்து வருமானவரி செலுத்துறப்போ ஏதாவது சிக்கல் ஏற்பட்டா அதை சரி செய்யறதுக்கு ரொம்பவே usefull-அ இருக்கும்னு சொல்லி இருக்காங்க. அதுக்கப்புறம் இந்த டெக்னாலஜி காலத்துல பார்த்தீங்கன்னா நவீன காலத்துல வந்து இந்த கரன்சி டிஜிட்டல் சொத்துக்கள் இது போன்றவை ரொம்பவே முக்கியமான விஷயமா இருக்கு இதெல்லாம் பார்த்தீங்கன்னா பழைய வருமானவரி சட்டத்துல தெளிவான விளக்கங்கள் எல்லாம் எதுவுமே இல்லை.
ஆனா இந்த புதிய வருமானவரி சட்டத்துல இது சார்ந்த விளக்கங்கள் எல்லாம் தரப்பட்டிருக்காம். அதுக்கப்புறம் பழைய சட்டத்துல பார்த்தீங்கன்னா தொண்டு நிறுவனங்களுக்கு சில வருமானவரி விளக்குகள் எல்லாம் வழங்கி இருக்காங்க ஆனா அதுல வந்து தெளிவான விளக்கங்கள் எல்லாம் இல்லாம இருக்கு இந்த புதிய மசோதா பிரிவு 332 முதல் 335 வரைக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு செலுத்தும் வருமானத்தை தெளிவா விளக்கி இருக்காங்க.
அதுக்கப்புறம் இந்த புதிய மசோதாவுல பார்த்தீங்கன்னா section 11-லிருந்து section 154 வரைக்கும் ஸ்டார்ட்டப் நிறுவனங்கள் டிஜிட்டல் வணிகங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகள் போன்றவை எல்லாம் அதுக்கான விளக்கங்கள் எல்லாம் தெளிவா கொடுத்திருக்காங்க. அதுமட்டுமில்லாம மூலதன ஆதாய வரி என்பதிலும் பார்த்தீங்கன்னா மாற்றம் கொண்டு வந்திருக்காங்க முந்தைய சட்டத்துல மூலதன ஆதாய வரி என்பது ஹோல்டிங் காலத்தை பொறுத்து நீண்ட கால முதலீடு குறுகிய கால முதலீடு என இரண்டு வகையில் இருக்கும் அதிலும் வந்து மாற்றங்கள் கொண்டு வந்திருக்காங்க. இது மாதிரி நிறைய விஷயம் புதிய வருமானவரி சட்டத்தில் வந்து மாற்றங்கள் கொண்டு வந்திருக்காங்க இது நடைமுறைக்கு வர வரைக்கும் வெயிட் பண்ணி பார்க்கலாம்.