தங்கம் 8000 கடந்திருக்கிறது சரியாக இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ₹8060 ரூபாய்க்கு விற்பனையாகிறது தங்கம் வரலாற்றில் ₹8000 ஒரு சவரன் என்பது விற்பனையாவது இதுதான் முதல் முறை ஒரு புதிய உச்சத்தை இன்றைய நாளில் தங்கவிலை தொட்டிருக்கிறது.
அதேபோன்று ஒரு சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து 64480 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இன்றைய நாளில் தங்க விலை பொதுவாகவே கடந்த பல மாதங்களாக நாம் தொடர்ந்து பார்த்து வந்தோம் என்றால் தங்கத்தின் விலை பொறுத்தவரையில் ஒரு நாள் ஏறும் ஒரு நாள் இறங்கும், ஏற்றம் இரக்கமாக காணப்பட்டு வரும் ஏறும்போது அதிக தொகையாகவும் குறையும் போது குறைவான தொகையிலும் தங்கம் விலை இருக்கும். கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக தங்கம் விலை என்றாலே உயர்ந்து கொண்டே வருவது என்பதுதான் வாடிகையாகிவிட்டது ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையை பொறுத்தவரையில் இன்று எவ்வளவு ரூபாய் உயர்ந்திருக்கிறது என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் தங்கம் விலை என்பது பார்க்கக்கூடிய வகையில் தொடர்ந்து தங்கம் விலை ஏற்றம் கண்டுகொண்டே வருகின்றது.
அதிலும் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இதில் மிக இரண்டு முக்கியமான அதிர்ச்சிகரமான செய்தி உள்ளது ஒன்று தங்கம் விலை என்பது வரலாற்றில் முதல் முறையாக ஒரு கிராம் ₹8000 கடந்தும் ஒரு சவரனுக்கு 64000 ரூபாயை கடந்து விற்பனை ஆகின்றது இது ஒன்று. மற்றொன்று
அதிர்ச்சியான செய்தி என்னவென்றால் இனி தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்பு என்பது மிக மிக மிகக் குறைவு என்றுதான் கூறுகிறார்கள்.
தங்கத்தின் விலை என்பது இனி குறைவதற்கான வாய்ப்பே கிடையாது அப்படி குறைந்தாலும் கூட 64000 மேல்தான் 64200, 64100 அது போன்ற அளவில்தான் இருக்கும். இனி வரக்கூடிய நாள்களில் தங்க விலை என்பது தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்லும் என்றும் கூறப்படுகிறது.
இதுதான் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது ஏற்கனவே தங்கத்து விலையை பொறுத்தவரையில் 60000 தொட்ட உடனே அது சாமானியர்கள் மற்றும் ஏழை ஏழை குடும்பத்தினருக்குஎட்டாக் கனியாக தங்கம் விலை மாறிவிட்டது. தற்போது நடுத்தர வர்க்கத்தினருக்கும் தங்க விலை என்பது எட்டாக்கனியாகவே மாறிக்கொண்டு செல்வதுதான் இந்த தங்கம் விலை உயர்வு என்பது காண்பிக்கின்றது.
இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் கூட தங்க விலை இனி குறையுமா குறையாதா என்ற பல பல கேள்விகள் முன்வைக்கப்பட்ட அடிப்படையில் தங்கம் விலை இனி வரக்கூடிய நாட்களில் குறைவதற்கான வாய்ப்பே இல்லை என்றுதான் கூறுகிறார்கள்.
அதற்கு மிக முக்கியமான காரணம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்து வரக்கூடிய பல அதிரடி அறிவிப்புகள் காரணமாக உலக அளவில் தங்கத்தின் மீதான முதலீடு என்பது வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறது. உலக அளவில் தங்கத்தின் தேவை என்பது பன்மடங்கு உயர்ந்திருக்கின்றது இது ஒரு மிக முக்கியமான காரணம்.
மற்றொரு காரணம் தங்கத்தின் விலை பொறுத்தவரையில் உலக அளவில் டாலரின் மதிப்பில்தான் அது கணக்கிடப்படுகிறது அந்த அடிப்படையில் பார்த்தோம் என்றால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து கொண்டே வரக்கூடிய காரணத்தால் தங்கம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் போது அதை நம் அமெரிக்க டாலர் கொடுத்து தான் வாங்க வேண்டும் அப்படி இருக்கும்போது தங்கத்தினுடைய வாங்கும் விலை என்பது இந்தியாவிற்கு உயர்ந்து கொண்டே வருகின்ற காரணத்தால் தங்கத்தின் மீதான விலை உயர்வு என்பது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதாக கூறப்படுகிறது.