அமைப்பு சாரா தொழிலாளிகளும் சமூக பாதுகாப்பு கொடுக்கணும்கிறதுக்காக government of india கொண்டுவந்துருகிறதான் e-Shram card.
e-Shram card-க்கு வாங்க தகுதி என்னென்னா அமைப்பு சாரா sector-க்கு கீழ வேலை செய்யணும். ஒரு organized company sector-க்கு கீழ வேலை செஞ்சு அந்த கம்பனிலிருந்து சலுகைகள் கிடைச்சா அவங்க இந்த e-Shram card எடுக்கமுடியாது.
இந்த card எடுக்கிறதுக்கு ITR file பண்ணக்கூடாது, ஆதார் நம்பர், ஆதார் லிங்க் மொபைல் நம்பர், and உங்க வயசு 16-59-குள்ள இருக்கனும். இதுமட்டுமில்லாமல் பான் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ and bank account details. இந்த கார்டு register பண்றதுக்கு அப்புறமா URN நம்பர் கொடுப்பாங்க அத பத்திரமா வச்சுக்கோங்க.
e-Shram card central government தான் கொடுக்குறாங்க. இந்த ஒரு கார்டு இருந்த போதும் central government-ல நிறைய திட்டம் இருக்கு ஒவ்வொரு திட்டத்துக்கும் தனித்தனி apply பண்றதுக்கு பதிலா இந்த ஒரு கார்டு மூலம் எல்லா திட்டத்துக்குக்கான பயனையும் பெறமுடியும். இந்த ஒரு கார்டுலையே நம்ம எல்லா details-வும் இருக்கும். இதன் மூலமா இவங்க இந்த திட்டதுக்கு தகுதியா.? இல்லையானு.? தெரியவந்துரும். இந்த கார்டு மூலமா உங்களுக்கு ஒரு திட்டம் வேணும்னா உங்களுக்கு எவ்வளவு eligibility, எவ்வளவு பணம் கொடுக்கலாம் அப்டிங்கிறத கூட தெரிஞ்சுக்கலாம்.