பென்ஷன் அப்டினா government, private sector வேலை பாக்குறவங்களுக்கு மட்டும்தான் கொடுப்பாங்க, சிறு தொழில் செய்றவங்களுக்கு கொடுக்கமாட்டாங்கனு நினைக்கிறீங்களா அவர்களுக்காகவே மத்திய அரசு கொண்டுவந்துதான் “Atal Pension Yojana”.
இந்த scheme-க்கான லாக்கிங் period ஒவ்வொருத்தொருடைய வயதை பொறுத்து மாறுபடும். இத நீங்க 18 வயசுல இருந்து ஸ்டார்ட் பன்னிருக்கலாம் இல்ல 30 வயசுல ஸ்டார்ட் பன்னிருக்கலாம் எந்த வயசுலயிருந்து ஸ்டார்ட் பண்ணலாம் இதற்கான லாக்கிங் period 60 வயசு.
இந்த scheme-ல மாதாமாதம் 1000-யைம் கிடைக்கலாம், 5000-யையும் கிடைக்கலாம். அது எப்படி ஒருத்தருக்கு 1000 ரூபாய் இன்னோருத்தருக்கு 5000 ரூபாய் கிடைக்கும்னு கேட்டீங்கன்னா, இதுல மொத்தம் மாதம் பென்ஷன் 1000, 2000, 3000, 4000, 5000 கிடைக்கிறமாதிரியான 5 வகை type இருக்கு. இதுல உங்களுக்கு எது விருப்பம் இருக்கோ அதுல நீங்க join பண்ணிக்கலாம்.
இந்த scheme-ல நீங்க monthly, quarterly அல்லது half yearly-ஆகவோ பிரீமியம் கட்டவேண்டியிருக்கும். நீங்க கட்டியது போக government 50% பிரீமியம் உங்களுக்காக கட்டிருவாங்க. பிரீமியம் chart கீழே கொடுக்கப்பட்டுள்ளது :
பிரீமியம் கட்ட சொல்றிங்க அப்ப லேட்டா கட்டுனா பெனால்டி இருக்கானு கேட்டீங்கன்னா, இருக்கு நீங்க கட்டுற பிரீமியம் 1 ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரை இருந்தா 1 ரூபாய் பெனால்டி. 1 ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரை இருந்தா 2 ரூபாய் பெனால்டி. 500 ரூபாயில் இருந்து 1000 ரூபாய் வரை இருந்தா 5 ரூபாய் பெனால்டி. 1000ரூபாய்க்கு மேல் இருந்தா 10 ரூபாய் பெனால்டி.
இந்த scheme-க்கான eligibility என்னென்னு பாத்தீங்கன்னா நீங்க ஒரு இந்தியனா இருக்கனும். உங்களுடைய வயசு 18 to 40 வரை இருக்கனும்.