ஜிஎஸ்டி இன்று ஒரு தொழில் செய்வதற்கு, தொழில் கடன் வாங்குவதற்கு, வங்கியில் கரண்ட் அக்கவுண்ட் வைத்துக் கொள்வதற்கு, ஆன்லைன் வர்த்தகம் செய்வதற்கு, இறக்குமதி ஏற்றுமதி செய்வதற்கு என்று பல விஷயங்களுக்கு மிக அத்தியாவசியமான, அங்கீகாரமான வரி கணக்கு எண்ணாக மாறிவிட்டது.
ஆனால் இங்கு ஜிஎஸ்டி எடுத்துக்கொடுக்கும் பலபேர் அதை மாதாமாதம் தாக்கல் செய்வதற்கு வலியுறுத்துவதில்லை அதைப் பற்றிய புரிதலை வணிகர்களுக்கு எடுத்துக்கொள்வதில்லை. அதை எப்படிக் கையாள்வது அதன்மூலமாக தொழிலை எப்படி காத்துக் கொள்வது வளர்த்தெடுப்பது என்ற புரிதலை ஏற்படுத்துவதில்லை.
நாங்கள் அங்குதான் வித்தியாசபடுகிறோம். ஒருவருக்கு ஜிஎஸ்டி எடுத்துக் கொடுத்தவுடன் அவருக்கு இதைப் பற்றிய புரிதலை தெளிவாக எடுத்துக்கூறி மாதாமாதம் தாக்கல் செய்வதற்கு ஞாபகப்படுத்தி அவர்களுடன் தொடர்ந்து பயணிக்கிறோம். அதுமட்டுமல்லாது அவர்களுக்கு தேவையான பில்லிங் மென்பொருள் வழங்கி அதன் மூலமாக அவர்களது தொழிலை மேம்படுத்த, கணக்குகளை முறைப்படுத்த, வாடிக்கையாளர்களை தொடர்ந்து வைத்திருக்க உதவுகிறோம்.
அதுமட்டுமல்லாது எங்கள் வாடிக்கையாளர்களின் தனிநபர் வருமானவரி கணக்கு, மற்றும் நிறுவனத்தின் வருமான வரிகணக்கு இரண்டையும் முறையாக தாக்கல் செய்து அதிகபட்சம் அவர்களுக்கு லாபம் கிடைக்க உதவுகிறோம்.
எளிமையாக சொல்வதென்றால் எங்களிடம் வரும் வாடிக்கையாளர் எந்த விதத்திலும் தொழில் மற்றும் தனிநபர் வருமான கணக்கு சிக்கல்களை எதிர் கொள்ளாதவாறு அதைப்பற்றிய அச்சமோ கவலையோ இல்லாதவாறு பார்த்துக்கொள்கிறோம். அவர்களது தொழிலை மேம்படுத்த அவ்வப்போது தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். ஏனென்றால் எங்களுக்கு நன்றாக தெரியும் அவர்களின் வளர்ச்சியில் தான் எங்களது வளர்ச்சி உள்ளது என்று.