GST பதிவு செய்யவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படுமா, இதை கேட்டவுடன் Covid time-இல் Trend ஆன “என்னன்னே சொல்றிங்க” MEME-தான் நினைவுக்கு வருகிறது.
பொதுவாக ஒரு தொழில் நடத்துபவர் அவர் விருப்பப்பட்டால் GST Register செய்துகொள்ளலாம். ஆனால், நிதியாண்டில் உங்களின் Turn Over 10 lakh-க்கு மேல் போகும்போது GST சட்டத்தின் கீழ் பதிவு செய்வது அவசியமாகும்.
இன்றைய நடைமுறையில், GST Registration என்பது அவசியமாக கருதப்படுகிறது. இருந்தாலும், Current Account Open பண்ணுவதற்காக மட்டும் GST Registration பதிவு செய்வது நமது முதல்வர் அவர்கள் கூறுவது போல்தான் “எந்த பயனும் இல்ல”. ஆகையால், உங்களின் Turn Over அதிகரிக்கும்போது மட்டும் கட்டாயமாக GST Registration
செய்துவிடுங்கள்.
உங்களது Turn Over வரம்புக்கு அதிகமாக போது, GST-யின் கீழ் பதிவு செய்யாதவர்களுக்கு அபராதம் ரூ 10,000 (அல்லது) அத்தகைய நபர் செலுத்த வேண்டிய வரியில் பத்து சதவீதம் (10%) இவற்றில் எது அதிகமாக இருக்கிறதோ அது விதிக்கப்படும்.
Example: ஒரு நபர் தொழில் ஒன்று நடத்துகிறார் அவரது Turn Over வரம்பைத் தாண்டியாதல் GST பதிவு செய்வது அவசியமாகிறது, ஆனால் அவர் GST-யின் கீழ் பதிவு செய்யத் தவறுகிறார், மேலும் அவரது வரம்பை தாண்டும் தேதி முதல், GST பதிவு தேதி வரை செலுத்த வேண்டிய மொத்த வரி ரூ.1,20,000 ஆகயிருந்தால், அபராதம் ரூ. 12,000 (1,20,000 x 10%) பொருந்தும்.
அதேசமயம், அதே நபரின் செலுத்த வேண்டிய மொத்த வரி ரூ.80,000/- ஆக இருந்தால், மேல கூறிய 10% பொருந்தாது , அவருக்கு குறைந்தபட்சம் ரூ 10,000 அபராதமாக இருக்கும்.
GST பதிவுக்கு தாமதமாக விண்ணப்பிக்கும் எந்தவொரு நபரும் GST அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டால், அத்தகைய நபர்க்கு அபராதம் ரூ 10,000 விதிக்கப்படும்.
அறிவிக்கப்பட்ட வணிக இடத்தில் GST எண்ணைக் காட்டாததற்கான அபராதம்:
CGST விதிகள் 2017 இன் விதி 18 இன் படி;
(1) பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு நபரும் பதிவு சான்றிதழை தொழில் செய்யும் முதன்மை இடத்திலும், கூடுதலாக வேறு இடத்தில் தொழில் நடத்தினாலோ கட்டாயமாக காண்பிக்க வேண்டும்.
(2) பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு நபரும் தொழில் செய்யும் முதன்மை இடத்திலும்,கூடுதலாக வேறு இடத்தில் தொழில் நடத்தினால் பெயர்ப்பலகையில் சரக்கு மற்றும் சேவை வரி அடையாள எண்ணை கட்டாயமாகக் காண்பிக்க வேண்டும். இதற்கு குறிப்பிட்ட அபராதம் எதுவும் இல்லை என்றாலும், GST சட்டத்தின் கீழ் பொது அபராதம் 25,000 ரூபாய் ஆகும்.
மேலும் இது பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் 89033-30035 என்ற எண்ணிற்கு நேரடியாக எங்களை அழைத்து அல்லது வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளவும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.