உலகெங்கிலும் உள்ள பொருட்களின் முறையான வகைப்பாட்டிற்காக இந்த அமைப்பு அறிமுகப்படுத்தபட்டுள்ளது. HSN குறியீடு என்பது ஆறு இலக்கக் குறியீட்டால் அடையாளம் காணப்பட்டும், இது 5000+ தயாரிப்புகளை வகைப்படுத்துகிறது மற்றும் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.HSN இன் முக்கிய நோக்கம், உலகெங்கிலும் உள்ள பொருட்களை முறையாக வகைப்படுத்துவதாகும். இது சரக்குகளின் சீரான வகைப்பாட்டைக் கொண்டுவருகிறது மற்றும் சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்குகிறது.மொத்த Turnover 5Cr ஆகா இருப்பின் 4 Digit HSN குறியீடு இருக்கவேண்டும். அதுவே Turnover 5Cr மேல் இருந்தால் 6 Digit HSN குறியீடு இருக்கவேண்டும். பொருட்களைப் போலவே, சேவைகளும் அங்கீகாரம், அளவீடு மற்றும் வரிவிதிப்பு ஆகியவற்றிற்காக ஒரே மாதிரியாக வகைப்படுத்தப்படுகின்றன. சேவைகளுக்கான குறியீடுகள் SAC என்று அழைக்கப்படுகின்றன.HSN குறியீடுகள் பொருட்களின் விரிவான விளக்கத்தைப் பதிவேற்ற வேண்டிய தேவையை நீக்கும். இது நேரத்தை மிச்சப்படுத்தும் மற்றும் ஜிஎஸ்டி ரிட்டர்ன்கள் தானியங்கி முறையில் தாக்கல் செய்வதை எளிதாக்கும்.