வருமான வரிச் சட்டம் 2025-ன்படி, 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் இனி வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்ய அலைய வேண்டியதில்லை. அதற்காகப் புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ளது தான் ‘படிவம் 125’ (Form 125).
யாருக்கெல்லாம் இது பொருந்தும்?
- உங்கள் வயது 75 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
- உங்களின் மொத்த வருமானமும் பென்ஷன் மற்றும் பேங்க் வட்டி மூலமாக மட்டுமே வர வேண்டும்.
- பென்ஷனும், வட்டியும் ஒரே வங்கிக் கணக்கில் வர வேண்டும்.
- வேறு எந்த வருமானமும் (வீட்டு வாடகை, தொழில் வருமானம், பங்குச்சந்தை லாபம் போன்றவை) கட்டாயம் இருக்கக் கூடாது.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் வங்கிக்குச் சென்று Form 125-ஐ பூர்த்தி செய்து கொடுத்துவிட்டால் போதும். உங்களுக்குப் பதிலாக பேங்க்-ஏ வரியைக் கணக்கிட்டு அரசாங்கத்திடம் செலுத்திவிடும். நீங்கள் தனியாக ஆன்லைனில் ITR தாக்கல் செய்யத் தேவையில்லை.
கவனிக்க வேண்டியவை: இது ITR தாக்கல் செய்யும் வேலையில் இருந்து மட்டுமே விலக்கு அளிக்கிறது; வரி செலுத்துவதில் இருந்து அல்ல. உங்களுக்கு வரி கட்ட வேண்டிய சூழல் இருந்தால், வங்கி அதை (TDS) தானாகவே பிடித்துக்கொள்ளும்.
உங்கள் வீட்டில் உள்ள முதியவர்களுக்கும், நண்பர்களுக்கும் இந்த பயனுள்ள தகவலைப் பகிருங்கள்.
