இந்த மாதிரி ஈஸியா Tax Department-அ ஏமாத்திட முடியாதுங்குறதுக்கு recently-ஆ நடந்த Shilpa Shetty – Raj Kundra case தான் ஒரு best example.
AY 2020-21 Income Tax Return (ITR)-ல, Shilpa Shetty தமக்கு Rs. 12.54 Crore ‘Gift’ வந்திருக்குனு account காமிச்சாங்க. யாரு கொடுத்ததுனு IT Department கேட்டதுக்கு, என் husband Raj Kundra natural love and affection-ல கொடுத்தாருனு சொல்லி, ஒரு Gift Deed-யும் PAN card details-உம் submit பண்ணாங்க.
இங்க தான் Assessing Officer (AO) ஒரு செம twist வச்சாரு. Raj Kundra-வோட அந்த வருஷ ITR-அ எடுத்து check பண்ணா, அவரோட total declared income வெறும் Rs. 27.71 Lakhs தான்.
Income 27 lakhs, ஆனா wife-க்கு கொடுத்த gift 12.5 Crores-ஆ? இது எப்படி சாத்தியம்னு கேட்டு, AO செக் வச்சாரு. அது மட்டுமில்லாம, காசு எப்படி account-க்கு வந்துச்சுங்குற சரியான Bank statement trail-உம் அவங்க submit பண்ணல.
உடனே AO, இந்த Rs. 12.54 Crore-அ Section 68 (Unexplained Cash Credit) கீழ add பண்ணி, Section 115BBE படி special tax போட்டுட்டாரு. Shilpa Shetty இதை எதிர்த்து CIT(A) கிட்ட appeal பண்ணியும் அங்கயும் fail ஆயிடுச்சு.
கடைசியா இந்த case ITAT (Income Tax Appellate Tribunal) கைக்கு போச்சு. அவங்க ரொம்ப தெளிவா சில points-அ சொன்னாங்க. Section 68 படி பணம் கொடுத்தவரோட financial capacity சரியா இருக்கணும். இங்க Raj Kundra-வின் income-க்கும், அவர் கொடுத்த gift amount-க்கும் சம்பந்தமே இல்லாம credit worthiness செமையா இடிக்குதுனு சொல்லிட்டாங்க.
Husband-wife-க்குள்ள கொடுக்கற gift tax-free (Sec 56(2)(x)) தான். ஆனா, scrutiny-னு வரும்போது வெறும் Gift Deed paper-ஐ மட்டும் காட்டிட்டு escape ஆக முடியாது. Exact money trail வேணும்.
கடைசியா, Shilpa Shetty-க்கு clean chit கிடைக்கல. இந்த case-ஐ திருப்பி AO-கிட்டயே அனுப்பி (Remanded back), முழுசா fresh-ஆ விசாரிங்க, clear bank statements அப்புறம் exact source of funds-அ submit பண்ண சொல்லுங்கனு order போட்டுட்டாங்க.
Client cases handle பண்ணும்போது நாம கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் இதுதான். Family-க்குள்ள fund transfer பண்றப்போ, வெறும் Gift Deed மட்டும் பத்தாது. Donor-ஓட financial capacity அப்புறம் proper bank records ரொம்ப ரொம்ப முக்கியம்.
Tax planning பண்றது தப்பில்லை, ஆனா அதை சரியான வழியில, proper documents-ஓட பண்ணனும்.
இந்த ITAT Order பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? உங்களோட opinions-அ comment-ல சொல்லுங்க.
