மத்திய அரசு மற்றும் தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Employees’ Provident Fund Organisation (EPFO) ஒரு முக்கிய தீர்மானத்தை அறிவித்துள்ளது. நீண்ட காலமாக செயலற்ற (Inactive / Inoperative) நிலையில் உள்ள சிறிய PF கணக்குகளில் இருக்கும் தொகையை தானாகவே (Automatic Refund) திருப்பி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டம் என்ன?
36 மாதங்கள் (3 ஆண்டுகள்) அல்லது அதற்கு மேல் எந்தப் பங்களிப்பும் இல்லாமல் இருக்கும் PF கணக்குகளில், ₹1,000 அல்லது அதற்கு குறைவான இருப்புத் தொகை இருந்தால், அந்தத் தொகை தானாகவே உரிய நபர்களின் ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் செலுத்தப்படும். இது முழுக்க முழுக்க தானியங்கி (Automatic) செயல்முறை ஆகும்.
யார் இதில் நன்மையை பெறலாம்?
3 ஆண்டுகளுக்கு மேல் பங்களிப்பு இல்லாத PF கணக்குகள் , Inactive / Inoperative நிலையில் உள்ள கணக்குகள் , ₹1,000 அல்லது அதற்கு குறைவான இருப்புத் தொகை கொண்டவர்கள் , ஆதார் மற்றும் வங்கி கணக்கு சரியாக இணைக்கப்பட்ட உறுப்பினர்கள்.
இந்த செயல்முறைக்காக எந்த Form-யும் நிரப்ப தேவையில்லை , Claim செய்ய தேவையில்லை , EPFO அலுவலகத்திற்கு செல்ல தேவையில்லை . தொகை நேரடியாக உங்கள் ஆதார்-லிங்கட் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஏன் இந்த முடிவு எடுக்கப்பட்டது?
நாட்டில் சுமார் 7 லட்சம் மேற்பட்ட Inactive PF கணக்குகளில் ₹30 கோடிக்கும் அதிகமான தொகை நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த idle amount-ஐ உரிய நபர்களிடம் விரைவாக சேர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது ₹1,000 வரை உள்ள inactive கணக்குகளுக்கு Pilot Project ஆக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த முயற்சி வெற்றிகரமாக இருந்தால், எதிர்காலத்தில் அதிக தொகை உள்ள inactive PF கணக்குகளுக்கும் இந்த தானியங்கி ரிபண்ட் திட்டம் விரிவுபடுத்தப்படும் வாய்ப்பு உள்ளது.
சிறிய PF தொகைக்காக நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது. EPFO-வின் இந்த புதிய முயற்சி, செயலற்ற கணக்குகளில் இருந்த பணத்தை நேரடியாக உறுப்பினர்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு பயனுள்ள முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.
உங்கள் PF கணக்கு நிலையை சரிபார்த்து, ஆதார் மற்றும் வங்கி விவரங்கள் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். தகவல் தெளிவாக இருந்தால், உங்கள் தொகை தானாகவே உங்களிடம் வந்து சேரும்.
