இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 6 முதல் 11 ஆம் தேதி வரை நடந்தது அதன் பிறகு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது இந்நிலையில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14 ஆம் தேதி காலை 9:30 மணிக்கு துவங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அன்றைய தினம் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்றும் கூறினார்.
மார்ச் 15 ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்ஆர் கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார் 17 ஆம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் துவங்குகிறது தமிழ்நாடு சட்டமன்ற பேரவையினுடைய அடுத்த கூட்டத்தினை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் வைத்து வருகிற 2025 மார்ச் மாதம் 14 ஆம் தேதி திங்கள் கிழமை காலை 9:30 மணிக்கு கூட்டியுள்ளேன் அன்றைய தினம் மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் 2025 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்வார்கள்.
மேலும் பேரை விதி 1913 ஒன்னின் கீழ் 2025 26 ஆம் ஆண்டுக்கான முன்ப மானியக் கோரிக்கைகள் பேரவை விதி 189 1ன் கீழ் 2024 25 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கையினையும் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால் திமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும் இதனால் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.