மத்திய நிதி அமைச்சர் நடந்துமுடிந்த GST கூட்டத்தில் சில மாற்றங்களை கொண்டுவருவதற்கு பரிந்துரை செய்துள்ளார். எலக்ட்ரிக், பெட்ரோல் மற்றும் டீசல் வண்டிகளுக்குக்கான GST 12%-லிருந்து 18%-ஆகவும், பேக்கிங் செய்யப்படாத பாப்கார்ன் 5%,பேக்கிங் பாப்கார்ன் 12% மற்றும் கேரமல் பாப்கார்ன் 18%-ஆகவும் உயர்த்தப்படப்போவதாகவும் பரிந்துரை செய்துள்ளார்.
செறிவூட்டப்பட்ட அரிசி மீதான GST 12%-லிருந்து 5%-ஆகவும் குறைக்கப்படப்போவதாகவும், மரபணு சிகிச்சை GST வரி 12%-லிருந்து வரி விலக்கு அளிக்கப்படுவதாகவும் பரிந்துரை செய்துள்ளார்.
பச்சை மிளகு, உலர் திராட்சை போன்றவைக்கு GST கிடையாது. ஆனால், வியாபாரிகள் வாங்கி விற்கும்போது GST உண்டு. இன்சூரன்ஸ் பிரீமியம் GST வரி விலக்கு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.