வருமானவரி தாக்கல் செய்வதற்கு (www.incometaxindiaefiling.gov.in) என்ற இணையதளம் பயன்பாட்டில் இருந்த நிலையில், புதிதாக (www.incometaxgov.in) என்ற இணையத்தளத்தை ஜூன் 7-ம் தேதி பயன்பாட்டுக்கு கொண்டுவந்தது குறிப்பிடதக்கது. இந்நிலையில், வருமான வரித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வருமானவரி சட்டம் 1961-ன் படி 15CA/15CB படிவங்களை மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும். தற்போது, வரிசெலுத்துவோர் 15CA படிவத்தை, 15CB படிவத்தில் பட்டய கணக்காளர் சான்றிதழுடன் மின்னணு-தாக்கல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர்.
அதன் பின்னர், வெளிநாட்டு வருமானம் இருந்தால் அதன் நகல் டீலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். புதிய மின்தாக்கல் இணையளத்தில் www.incometax.gov.in, 15CA/15CB படிவங்களை தாக்கல் செய்வதில் வரிசெலுத்துவோர் சில சிரமங்களை சந்தித்ததால், இந்த படிவங்களை அங்கீகரிக்கப்பட்ட டீலரிடம் 2021 ஜூன் 30-ம் தேதிக்கு முன்பாக கைப்பட சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.