நாடு முழுவதும் வருமானத்தை சரியாக கணக்கில் காட்டாமல் மோசடி செய்த 62 உணவகங்கள் மீது வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது
ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் 1.77 லட்சம் உணவகங்களின் வருமான மற்றும் பணப் பரிமாற்ற தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டதில், பல உணவகங்கள் விற்பனை தொகையை குறைத்து காட்டி ரூ.408 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து 22 மாநிலங்கள், 46 நகரங்களில் சர்வே நடத்தப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தவறுகளை திருத்திக் கொள்ள மார்ச் 31, 2026 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை வருமான வரித்துறை “Saksham Nudge” திட்டத்தின் கீழ் செயல்படுத்தி வருகிறது.
வரி விவரங்களை சரியாக அளிக்காத உணவகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
