Tax-அ மிச்சம் பண்ணனும்னு நெனச்சு, குறுக்கு வழியில போனா என்ன ஆகும்னு தெரிஞ்சுக்க இந்த real life incident-அ கண்டிப்பா படிங்க.
நடந்த சம்பவம் என்ன.?
சமீபத்துல ஒருத்தர் தன்னோட ITR-ல Annual income வெறும் Rs 7 Lakhs-னு காட்டியிருக்காரு. ஆனா, அதுல Rs 2 Lakhs-அ ஒரு political party-க்கு donation கொடுத்திருக்கேன்னு சொல்லி, Section 80GGC-க்கு கீழ tax deduction கேட்டிருக்காரு.
Section 80GGC-னா என்ன.?
Income Tax Act-ல இருக்கிற ஒரு rule இது. அதாவது, registered political parties-க்கு நாம cheque மூலமாவோ அல்லது online-லையோ donation கொடுத்தா, அந்த 100% amount-க்கும் அப்படியே tax deduction வாங்கலாம். இந்த rule-அ தான் அந்த நபர் misuse பண்ணிருக்காரு.
இந்த Fake Contributions Scam எப்படி நடக்கும்.?
நிறைய பேருக்கு இந்த secret தெரிஞ்சிருக்கும்:
Election-லயே participate பண்ணாத சில dummy political parties இருப்பாங்க. Tax கட்ட வேண்டியவங்க, அந்த கட்சிக்கு ஒரு Rs 2 Lakhs-அ cheque-ஆ கொடுப்பாங்க. அந்த கட்சி என்ன பண்ணும்? ஒரு 5% அல்லது 10% commission எடுத்துக்கிட்டு, மீதி amount-அ அப்படியே cash-ஆ return பண்ணிடுவாங்க.
கூடவே, ITR file பண்ணி tax மிச்சம் பண்றதுக்கு ஒரு fake receipt-ம் கொடுத்துடுவாங்க.
IT Department எப்படி கண்டுபிடிச்சாங்க.?
இங்கதான் IT Department ஒரு சிம்பிள் logic யூஸ் பண்ணாங்க. “வருஷத்துக்கே 7 Lakhs தான் income. Family expenses, EMI, பசங்க school fees எல்லாம் போக, இவன் எப்படி 30% income-அ யாருனே தெரியாத ஒரு political party-க்கு donation பண்ணுவான்?”-னு scrutiny பண்ண ஆரம்பிச்சாங்க. கடைசியா investigate பண்ணி பார்த்தப்போ, அது ஒரு bogus party-னு கண்டுபிடிச்சிட்டாங்க.
Climax என்ன ஆச்சு.?
இந்த கேஸ் ITAT Court வரைக்கும் போச்சு. கோர்ட்ல அந்த ஆளால valid proof எதுவும் produce பண்ண முடியல. உடனே Court, “இது fake donation, அதனால இந்த claim reject செய்யப்படுது”-னு சொல்லிட்டாங்க. அந்த Rs 2 Lakhs-யும் அவரோட income-லயே ஆட் பண்ணி, அதுக்கான tax, penalty, interest எல்லாத்தையும் சேர்த்து கட்ட சொல்லிட்டாங்க.
Moral of the story:
Tax planning பண்றது தப்பில்லை. 80C, Health Insurance, HUF-னு எவ்வளவோ legal options இருக்கு. ஆனா, இந்த மாதிரி fake receipts வச்சு tax evasion பண்ண நினைச்சா, மிச்சம் பண்ண நெனச்ச டாக்ஸை விட ரெண்டு மடங்கு அதிகமா penalty கட்ட வேண்டி வரும்.
இந்த information useful-ஆ இருந்தா, உங்க friends & family group-ல மறக்காம share பண்ணுங்க. தொடர்ந்து Intaxseva-அ follow பண்ணுங்க.
