நாடாளுமன்ற மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த நிலையில், 6-வது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
உரையை தொடங்கிய அவர், “விவசாயத்திற்கு மத்திய அரசு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், பெண்கள் உயிர்கல்வி பயில்வது 10 ஆண்டுகளில் 28% அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.இந்திய கல்வித்துறையில் தேசிய கல்விக்கொள்கையானது பெரும் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.
தெருவோர வியாபாரிகள் மத்திய அரசின் திட்டங்களால் 78 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். 4 கோடி விவசாயிகள் பிரதான் மத்திரி காப்பீடு மூலம் பயன் அடைந்துள்ளனர்.
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற மிகப்பெரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். திறன் இந்தியா திட்டத்தின் கீழ் 1.1 கோடி இளைஞர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.
கோவிட் காலங்களில் பல சவால்களை சந்தித்தபோதிலும், ஆவாஸ் யோஜனா கிராமப்புற திட்டத்தை செயல்படுத்துவது தொடர்ந்த வண்ணம் இருந்தது. 3 கோடி வீடுகள் எனும் இலக்கை தற்பொழுது எட்டியுள்ளதாகவும். குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மேலும் 2 கோடி வீடுகள் என்ற இலக்கு அடுத்த 5 ஆண்டுகளில் எட்டப்படும் என்றும் அவர் கூறினார்.
தற்போதுள்ள மருத்துவ உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்தி மேலும் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க எங்கள் அரசு திட்டமிட்டுள்ளதாகவும் மற்றும் அவற்றில் உள்ள சிக்கல்களை ஆய்வு செய்து ஆலோசனை வழங்க குழு அமைக்கப்படும் என்றும் கூறினார்.