கூட்டு தொழில் நிறுவனம் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் கூட்டு சேர்ந்து தொழில் தொடங்க ஆசைப்பட்டால் அவர்களுக்கு இருக்கின்ற மிகச்சிறந்த வாய்ப்பாக கூட்டுத் தொழில் நிறுவனம் இருக்கும், இந்தக் கூட்டுத் தொழில் நிறுவனத்தை ஆடிட்டர் மூலமாகவும் அல்லது அவரின் உதவியாளர் மூலமாக மாவட்ட பதிவு அலுவலகத்தில் பதிவு செய்வதன் மூலமாக இந்த நிறுவனத்தை தொடங்கலாம்.
இதற்கென்று தனியாக பத்திரம் எழுதி யார் யார் எவ்வளவு முதலீடு யார் யாருக்கு எவ்வளவு லாபம் என அனைத்து தகவல்களையும் பதிவு செய்யலாம் பதிவு செய்து பத்திலிருந்து பதினைந்து நாட்களுக்குள் டாக்குமெண்ட் கிடைக்கும், இந்த நிறுவனம் ஆரம்பிக்கும் குறை என்னவென்றால் இந்த நிறுவனத்தை ஒவ்வொரு வருடமும் ரெனிவல் செய்ய வேண்டும் அப்படி செய்யாத பட்சத்தில் அந்தப் பத்திரம் செல்லாததாகிவிடும் இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் கூட்டாளிகள் அதாவது பார்ட்னர் என்று அழைப்பார்கள்.இதில் வருகின்ற லாபம் நஷ்டம் எதுவாக இருந்தாலும் டாகுமெண்ட்டில் சொன்னது போல் அவரவருக்கான பங்கு பிரித்து கொள்ளவேண்டும்.
நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கு அனைவரும் பொறுப்பாவார்கள் இதில் அதிகபட்சம் பத்து நபர்கள் வரை கூட்டாளியாக சேரலாம் இந்த நிறுவனத்தின் நடவடிக்கைகள் மூலமாக ஏதாவது கடன் ஏற்பட்டாலோ அல்லது நிறுவனம் திவால் ஆகும் பட்சத்தில் கூட்டாளிகள் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் சொத்தை பறிமுதல் செய்ய கடன் கொடுத்தவருக்கு உரிமை உண்டு.
இந்த கூட்டு தொழில் நிறுவனத்தை சேர்ந்த ஒருவரிடம் பணமும் இன்னொருவரிடம் தொழில் துறை சார்ந்த அறிவும் இன்னொருவரிடம் தொழில் அனுபவம் இருக்கும் பட்சத்தில் இவர்கள் அனைவரும் இணைந்து தொழில் தொடங்க மிகச் சிறந்த வாய்ப்பாக இந்த கூட்டுத் தொழில் நிறுவனம் இருக்கும்.
மேலும் இது பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் 89033-30035 என்ற எண்ணிற்கு நேரடியாக எங்களை அழைத்து அல்லது வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளவும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.