நம்மில் பலருக்கும் இன்றுவரை வருமான வரித்துறையில் “ஒரே குழப்பமாக இருக்குல” என்பதுபோல் இருக்கும் விஷயம் Financial Year-கும் மற்றும் Assessement Year-கும் வித்தியாசம் என்ன என்பதுதான்.
இரு தினங்களுக்கு முன்பாக ஒரு வாடிக்கையாளர் எங்களுக்கு அழைத்து ” சார் எனக்கு IT-ல் இருந்து நோட்டீஸ் வந்திருக்கிறது. பாத்தீங்களா நான் அப்போவே சொன்னேன்ல.. என்று ரொம்பவும் புலம்ப ஆரம்பித்துவிட்டார்.” சார் பொறுங்க அதில் என்ன இருக்கு என்று பார்த்து விட்டு சொல்கிறோம் நாங்கள் அப்படி தவறாக தாக்கல் செய்து விட மாட்டோம்.” என்று சொல்லி அவர் அனுப்பிய இமெயில் நோட்டீசை பார்த்தோம். சிரிப்பு வந்துவிட்டது.
அவருக்கு வந்த நோட்டீஸ் முந்தைய வருஷம் அதாவது (FY 2020-2021) (AY 2021-2022)அவராக தாக்கல் செய்யும்போது ஏற்பட்ட பிழையினால் வந்திருக்கிறது. நாங்கள் தாக்கல் செய்து கொடுத்தது நடப்பு தாக்கல் வருடம்அதாவது (FY 2021-2022) (AY 2022-2023) பிறகு அந்த நோட்டீசுக்கு பதில் அளித்துவிட்டு அவருக்கு தெரிவித்தோம். பலருக்கும் Assesment Yearக்கும் Financial Yearக்கும் உள்ள வித்தியாசம் புரிவதில்லை.
இப்போது அவர் ” அப்படியா சார்.. இந்த நோட்டீஸ் ரெஸ்பான்ஸ் பண்ணதுக்கு எவ்வளவு சார்?” என்று கேட்டார். ” அதெல்லாம் வேண்டாம் சார். நீங்கள் எங்களுடைய வாடிக்கையாளர். எங்களுடைய சேவையில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நான்கு நண்பர்களுக்கு கூறுங்கள் அது போதும் என்று கூறி விட்டோம்.” அவர் “நிச்சயம் நான் செய்கிறேன் சார்.. உங்களிடம் வந்த பிறகு எனக்கு இந்த விஷயத்தில் பதட்டம் குறைந்து இருக்கிறது” என்று கூறினார். சொன்னபடி அவர் நிறைய நண்பர்களுக்கு எங்களது சேவையை பரிந்துரைத்தார். மேலும் இந்த கூகிள் பாரத்தில் உங்களது விவரங்களை அளித்தால் உதவ தயாராக இருக்கிறோம்.
மேலும் இது பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் 89033-30035 என்ற எண்ணிற்கு நேரடியாக எங்களை அழைத்து அல்லது வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளவும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.