composition Scheme என்பது வரி செலுத்துவோருக்கு GSTயின் கீழ் எளிமையான திட்டமாகும். சிறிய வரி செலுத்துவோர் கடினமான GSTலிருந்து விடுபட்டு, நிலையான விகிதத்தில் GSTயை செலுத்தலாம். இந்த திட்டத்தை எந்த வரி செலுத்துபவரும் தேர்வு செய்யலாம்.இந்த Schemeயில் உள்ளவர்களால் ITC claim செய்யமுடியாது.composition dealer வாடிக்கையாளர்களிடமிருந்து வரி வசூலிக்க கூடாது, அவர்தான் வரி செலுத்தவேண்டும். Manufacture and Traders 1%, Restaurants not serving alcohol 5%, And Other service providers 6% விகிதத்தில் செலுத்தவேண்டும்.
மேலும் செய்யப்படும் பொருட்களுக்கு GST, Reverse charge மீதான வரி, மற்றும் பதிவு செய்யப்படாத டீலரிடமிருந்து வாங்குவதற்கான வரியையும் அவர்தான் செலுத்தவேண்டும். ஐஸ்கிரீம், பான் மசாலா அல்லது புகையிலை உற்பத்தியாளர், மாநிலங்களுக்கு இடையே விற்பனை செய்யும் நபர்,ஒரு சாதாரண வரி விதிக்கக்கூடிய நபர் அல்லது குடியுரிமை இல்லாத வரி விதிக்கக்கூடிய நபர், மற்றும் e-commerce operator மூலம் பொருட்களை வழங்கும் வணிகங்கள்.இந்த நபர்கள் அனைவரும் இந்தத் திட்டத்தைத் தேர்வுசெய்ய முடியாது.